முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் – சீமான்

Seeman, the chief co-ordinator of the Naam Tamil Party, congratulated Mukha Stalin, who will take over as chief minister.

முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் முக ஸ்டாலினுக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு, தேசிய தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிமுகவை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று மூன்றாவது கட்சியாக திகழ்கிறது. இந்த நிலையில், முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து, சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாளை ஆட்சியமைக்கவிருக்கும் திமுகவுக்கும், அதன் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஐயா முக ஸ்டாலின் அவர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

unknown node