ஆளுநர் மலிவான அரசியலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.! சிபிஐ மாநிலச்செயலாளர் முத்தரசன் விமர்சனம்.!

உயர் பதவியில் இருக்கும் ஆளுநர், பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார். மலிவான அரசியலில் ஈடுபட்டுவருகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். - இந்திய கம்யூனிஸ்ட்

உயர் பதவியில் இருக்கும் ஆளுநர், பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார். மலிவான அரசியலில் ஈடுபட்டுவருகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

சென்னை ஐஐடியில் காசி – தமிழ்ச்சங்கம் விழாவுக்கான தொடக்க விழா நடைபெற்றது அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது கூறுகையில், ‘ எந்த ஒரு நாடும் மதம் சார்ந்து தான் இருக்க முடியும். அதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அழித்துவிட்டார்கள். அதனை மீட்டெடுக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ‘ என தனது கருத்துக்களை முன்வைத்தார்.

இவர் பேசியதற்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், ‘ அரசியலமைப்பு அதிகாரம் கொண்டு, உயர் பதவியில் இருக்கும் ஆளுநர், பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார். மலிவான அரசியலில் ஈடுபட்டுவருகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். என தனது கண்டனத்தை பதிவிட்டு உள்ளார்.

ஆளுநர் மலிவான அரசியலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.! சிபிஐ மாநிலச்செயலாளர் முத்தரசன் விமர்சனம்.!