கடந்த திங்கள் கிழமை பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் கூடியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல்நாள் ஆளுநர் உரை, அடுத்த இரண்டு நாள் விவாதம் , அதற்கடுத்து இன்று முதல்வர் பதிலுரை என பட்டியலிடப்பட்டுள்ளது. அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி..! முன்னதாக திங்களன்று ஆளுநர் உரையின் போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு கொடுத்த உரையை வாசிக்க்காமல், அதனை வாசிக்க தனக்கு […]
இந்த வருடன் முதல் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையின் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன் பிறகு பட்ஜெட் கூட்டத்தினரின் அறிமுகத்தை வாசித்தார். அதன் பின் பாதியில் அதனை நிறைவு செய்து, இங்கு (சட்டப்பேரவையில்) தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறி இரண்டு நிமிடத்தில் உரை நிறைவு செய்து அவையை விட்டு வெளியேறினார் ஆளுநர் ரவி . இது குறித்து சபாநாயகர் அப்பாவு சட்டமன்றத்தில் கூறுகையில், தேசிய கீதத்தை […]
மகாத்மா காந்தியின் நினைவு நாள் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் மேலும் அறிக்கை வாயிலாக கூறுகையில், “என் மதத்தின் மீது சூளுரைத்து கூறுகிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயங்க மாட்டேன். ஆனால் […]
இன்று 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, மெரினாவில் காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் அருகே உள்ள விழா ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 8 மணிக்கு ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டது. அத்துடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. பின்னர், ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர […]
இன்று 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்திற்கு நாட்டின் பிரதமர், மாநில முதல்வர்கள் கொடியேற்றி வைப்பது போல, குடியரசு தின விழாவுக்கு நாட்டின் குடியரசு தலைவர், மாநில ஆளுநர்கள் தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துவர். தமிழக தலைநகர் சென்னையில், தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, மெரினாவில் காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் அருகே உள்ள விழா ஏற்பாடு […]
இன்று சுதந்திர போராட்ட வீரர், இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்தவர் என பல்வேறு பெருமைகளை கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 127வது பிறந்தநாள் ஆகும். நேதாஜி பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு என பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நேதாஜியின் பிறந்தநாள் விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஆங்கிலேயர் […]
இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தாயார் சன்னதி அருகே உள்ள ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் தண்ணீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார். இதைத்தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்தார். அப்போது, கோவில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோவில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும் பங்கு உண்டு, கோவில் மட்டுமல்ல பொது இடங்களிலும் தூய்மை பேண வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வதற்காகத் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று அங்கு சென்றுள்ளார். இந்த சூழலில், முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்காமல் ஆளுநர் ரவி, இன்று துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசுவதாக கூறி பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, சேலத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு […]
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பொறுப்பில் இருந்த சண்முகசுந்தரம் இன்று காலை தனது பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக தமிழக அரசுக்கு தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இனி அரசு வழக்கறிஞராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் தனது வழக்கறிஞர் பணியினை தொடர உள்ளதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. முரசொலி நிலம்: பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..! 1977இல் வழக்கறிஞராக தனது பணியினை தொடர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ராஜீவ்காந்தி கொலை குறித்த விசாரணை கமிஷன், […]
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். துணை வேந்தர் நியமனம் தொடர்பான முடிவுகளையும் ஆளுநர் தான் தேர்வு செய்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் (கோவை), கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் பணிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ்.. முதலமைச்சர் அறிவிப்பு பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க வழக்கமாக, ஆளுநர் தரப்பில் இருந்து ஒரு நபரும், மாநில அரசு […]
திருச்சி விமான நிலையமானது தற்போது 60,723 மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக தற்போது விரிவாக்கம் செய்ப்பட்டுள்ளது. இந்த புதிய விரிவாக்கம் செய்ப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று திருச்சி வந்துள்ளார். தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தற்போது திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி. அங்கு அவருக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். அதன் பிறகு திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றும் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற வேண்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்படும். ஆனால், ஆளுநர் ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்காமல், அந்த மசோதாக்களை கிடப்பில் போட்டும், பல்வேறு மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியும் வந்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல், நிலுவையில் வைத்துள்ளார். அதனால், மசோதாக்களுக்கு […]
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்தி ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்தது. இதனால், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. போதைப்பொருள் வாங்குவதற்காக பெற்ற பிள்ளைகளை […]
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக அம்மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதாவது, பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் மாநில ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த சில நாட்களாக உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மார்பு முன்பு நடைபெற்று வருகிறது. அப்போது, பஞ்சாப் மாநில தரப்பு மற்றும் ஆளுநர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கம் நடத்துகிறார் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கான சட்ட மசோதாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் கையெழுத்திடாமல் இருக்கிறார். அவர் கையெழுத்திட்டால் தான் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அந்த சட்டம் அமலுக்கு வரும். அதனால், இன்னும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கையெழுத்திடாத ஆளுநருக்கு எதிரான குரல் தமிழகத்தில் நாளுக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. […]
ஆதார் எண் உடன் மின் இணைப்பை இணைக்கும் செயல்பாட்டுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். – டி.டி.வி.தினகரன். ஆன்லைன் விளையாட்டு தடை சட்ட மசோதாவுக்கு இன்னும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்த்து வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து அமமுக கட்சி தலைவர் டிடிவி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இன்று செய்தியாளர்களிடன் கூறுகையில், சட்ட மசோதா என்பது எந்த ஆட்சி காலத்தில் கொண்டு வந்தாலும் சரி. அதனை […]
திண்டுக்கல்லில் நடைபெறும் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை. திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தடைந்தார். பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்து மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் பிரதமர் வந்தடைந்தார். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, […]
காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா ஒரே மேடையில் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இருக்கின்றனர். மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்தடைந்த பிரதமர் மோடி திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்க வந்துள்ளார் . விழா நடைபெறும் பல்கலைக்கழக மேடையில் தற்போது பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் […]
உயர் பதவியில் இருக்கும் ஆளுநர், பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார். மலிவான அரசியலில் ஈடுபட்டுவருகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன். சென்னை ஐஐடியில் காசி – தமிழ்ச்சங்கம் விழாவுக்கான தொடக்க விழா நடைபெற்றது அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது கூறுகையில், ‘ எந்த ஒரு நாடும் மதம் சார்ந்து தான் இருக்க முடியும். அதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் நமது பண்பாடு […]
தமிழக ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார். அதன் பின்னர் அந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இன்று காலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு சென்னை , கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்ததும், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதாவது உள்ளே அரசியல் […]