மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

Chief Minister Stalin's consultation with district collectors today!

சென்னை:அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில்,கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்  இன்று காலை காணொலி காட்சி மூலமாக ஆலோசனையில் ஈடுபடுகிறார்.