தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணிகளுக்கு தகுதியான ஆட்களை நிரப்ப தமிழக அரசு சார்பில் தற்போது மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 2,78 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களை நிரப்ப தமிழக அரசு சார்பில் வருவாய்துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நவம்பர் 14ஆம் தேதி பரிசளிக்கப்பட்டு, முறையான நேர்காணல் நடத்தில்டிசம்பர் 19ஆம் தேதி பணிநியமன ஆணைகளை வழங்கிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் தற்பொழுது மீண்டும் கொரோனா தொற்று பரவல் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.அந்த வகையில்,தமிழகத்திலும் சென்னை,கோயம்புத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.இதனால்,பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும்,கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு முன்னதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில்,காதாரம்,வருவாய்,காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்கள்,நிறுவனங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பொது இடங்களில் இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக நேற்று முன்தினம் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார். இந்நிலையில்,சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி,அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும், அக்கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: “அனைத்து கல்வி நிலையங்கள்,அலுவலகங்கள் என […]
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பெரும்பாலான கட்டுப்பாடுகளை தமிழக அரசு நீக்கியிருந்தது.இந்நிலையில்,தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதால் உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: அதிகரிக்கும் கொரோனா: “டெல்லியில் ஏப்ரல் 4 ஆம் தேதி ஒரு நாளைக்கு 82 கொரோனா வழக்குகள் இருந்த நிலையில்,நேற்று 632 ஆக உயர்ந்துள்ளன.1 சதவீதத்திற்கு கீழே இருந்து […]
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பட்டியலின பழங்குடியினர், விளிம்பு நிலை மனிதர்கள், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் முன்னுரிமை அளிக்கவேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், பள்ளிகள், மாணவர் விடுதிகள், நியாய விலை கடைகள் ஆகியவற்றை கட்டாயமாக நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு, மாணவர்களுக்கு, எளியோர்களுக்கு எந்த தரத்தில் சேவை வழங்கப்படுகிறது […]
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. தமிழக அரசின் அரசின் திட்டங்களை அறிந்துக்கொள்ளவும், அவற்றை சிறப்பாக செயல்படுத்தவும் முதலமைச்சர் தலைமையில் மாநாடு நடைபெற உள்ளது.இன்று முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை நடைபெறும் […]
சென்னை:ஒமைக்ரான் வைரஸ்,தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். தென் ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருகிறது. மருத்துவ நிபுணர்களால் பி.1.1.529 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸுக்கு, ஓமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி உள்ளது.எனவே தென் ஆப்ரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து […]
தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு மருத்துவத்துறை செயலர் அறிவுறுத்தல். தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல […]
சென்னை:வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக காணொலி காட்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில்,வடகிழக்கு […]
சென்னை:அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில்,கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் […]
தமிழ்நாடு முழுவதும் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை : தமிழ்நாடு முழுவதும் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் நரிக்குறவர்களும் பழங்குடியினரும் வசிக்கும் […]
பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக, அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சூழலுக்கேற்ப மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாக்குமரி,நெல்லை,தூத்துக்குடி,தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதற்கிடையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தததால் சாலைகளில் […]
மையங்கள் மட்டுமன்றி வீடு, வீடாகவும் சென்று கொரோனா தடுப்பூசி போட வேண்டும். இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, 50%-க்கும் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்ட 40 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகம், மகாராஷ்டிரா, மணிப்பூர், […]