சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் முழு வீச்சில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் அவசர கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி, […]
ஓமிக்ரான் பரவல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு இன்று ஆலோசனை. தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் பிற்பகல் 12 மணியளவில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளின் போது […]
ஓமைக்ரான் வைரஸ் பரவல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொலி மூலம் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார். தென் ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருகிறது. மருத்துவ நிபுணர்களால் பி.1.1.529 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸுக்கு, ஓமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி உள்ளது. எனவே தென் ஆப்ரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து இந்தியா […]
சென்னை:அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில்,கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் […]
வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 25 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் […]
கொரோனா தடுப்பூசி பணி குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், காணொலி […]
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்வர் இன்று 38 மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலி வாயிலாக ஆலோசனை. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் முக ஸ்டாலின் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து, மேலும், ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா […]
தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ஆட்சியர்களுடன்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,நாளை காலை 11 மணியளவில்,காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஜூன் 21 வரை ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக 38 மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி,நாளை காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில்,மாவட்ட வளர்ச்சிப்பணிகள்,கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவது […]
முதல்வர் பழனிச்சாமி அக்.,28ந்தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு நடவடிக்கைகள் நிறைவடைய உள்ள நிலையில் வரும் 28ம் தேதி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆலோசனையில் தியேட்டர்கள் திறப்பு, சென்னை புறநகர் ரயில் சேவை உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.