"3 கோயில்களில் 3 வேளை அன்னதானம்" வழங்கும் திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

Chief Minister Stalin inaugurated the alms program at Samayapuram, Tiruchendur and Thiruthani temples through a video presentation.

சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தற்போது காணொலி காட்சி மூலம் ,சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி கோயில்களில் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்படி,இக்கோயில்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படும்.குறிப்பாக,ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் வரை நாளை முதல் கோயில்களில் அன்னதானம் பார்சலில் வழங்கப்படும்.

அதன்முதற்கட்டமாக,சமயபுரம் கோயிலில் தலைவாழை இழையில் ஜாங்கிரி,சாதம்,சாம்பார்,ரசம்,மோர்,கூட்டுப்பொறியல்,வடை,பாயசத்துடன் பக்தர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.

இதற்கு முன்னதாக,ஸ்ரீரங்கம் ,பழனி ஆகிய இரண்டு கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில்,தற்போது அதன் எண்ணிக்கை 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.