திருவள்ளூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. ஒரு பக்கம், மாநாடுக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முதல் மாநாடு வெற்றி பெற கொடியை வைத்து பூஜை செய்வதற்காக திருத்தணி முருகன் மலைக் கோயிலில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் 100 அடி நீளம் கொண்ட கட்சிக் கொடி ஏந்தி மாடவீதியில் விதிகள் மீறி ஊர்வலம் நடத்தினர். இதனை […]
சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தற்போது காணொலி காட்சி மூலம் ,சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி கோயில்களில் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்படி,இக்கோயில்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படும்.குறிப்பாக,ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் […]
திருத்தணி கோயிலில் இன்று முதல் 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக கொரோனா பரவல் அதிகரித்ததனால், தளர்வுகளின்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், கொரோனா பரவல் குறைந்ததையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில் தளங்கள் திறக்கப்பட்டன. ஆனால்,கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது.இதனால்,நேற்று கூடுதல் தளர்வுகள் இன்றிஆகஸ்ட்9 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக முதல்வர் அறிவித்தார். இந்நிலையில்,திருத்தணி முருகன் கோயிலில் இன்று முதல் ஆகஸ்ட் 4 ஆம் […]
திருத்தணி அருகே மத்தூர் ஊராட்சியில் 2வது வார்டில் அதிமுக சார்பில் பூங்கொடி என்பவர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் மற்றும், இவரது நான்கு மாத குழந்தை, இவரது தாய் வசந்தி ஆகியோரை காணவில்லை என காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. திருத்தணி அருகே உள்ள மத்தூர் எனும் ஊரில் உள்ள 2 வது வார்டில் நடைபெற்ற தேர்தலில் பூங்கொடி எனபவர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவரது கணவர் கோட்டி திருப்பூரில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி […]
தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் அறிகுறி சில மாவட்டங்களில் உறுதியாகியுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இதுவரை 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி, அவர்களுக்கு அங்கு அரசு மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல மதுரையில் டெங்கு காய்ச்சல் 6 பேருக்கு இருப்பது அறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் கூறுகையில் இதுவரை மதுரை அரசு மருத்துவமனையில் 6 பேருக்கு டெங்கு இருப்பதாகவும், மேலும் 47 பேருக்கு […]
திருத்தணி நீதிமன்ற வளாகம் அருகே மகேஷ் என்பவர் கொடூரமாக ஓட ஓட விட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் உயிர் பிழைக்க அருகில் உள்ள உணவகத்தில் உள்ளே ஓடினார் அங்கும் விடாமல் துரத்தி மகேஷை வெட்டி வீசினர். இதில் சம்பவ இடத்திலேயே மகேஷ் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸ் தனிப்படை அமைத்து விசாரித்தது. இதில், கைப்பந்து விளையாட்டின் பொது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. என தகவல் வெளியாகியது. குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி […]