தூத்துக்குடி மாவட்டத்தில் 11 கிலோ அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை கடத்த முற்பட்டவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் காரில் கடத்தியுள்ளனர். இவர்களை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, உடன்குடியில் புதுமனை எம் பகுதியில் காரில் 11 கிலோ அம்பர் கிரிஸ் எனப்படும் தடைசெய்யப்பட்ட திமிங்கல எச்சத்தை தனிப்படை காவல் துறையினர் சோதனையின் போது பிடித்தனர். […]
இன்று ஆந்திர மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் திருச்செந்தூரில் கடல் 200 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது என கூறப்படுகிறது. திருச்செந்தூரில் கோவிலை ஒட்டிய பகுதிகளில் கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் சிறிது தூரம் வரை உள்வாங்கிய பின் சீராகும். 2 நாட்களுக்கு முன் கடல் உள்வாங்கியது. இந்நிலையில், இன்று ஆந்திர மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் திருச்செந்தூரில் கடல் 200 மீட்டர் தூரம் வரை […]
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு பொதுமக்கள் பொது தரிசனம் செய்ய 20 ரூபாய், 100 ரூபாய், 250 ரூபாய் என கட்டணங்கள் சாமி தரிசனத்திற்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கட்டண முறையில் மாற்றத்தை செய்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், திருக்கோயில் இணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் பக்தர்களின் நலன் கருதி இனி ரூ.20 மற்றும் ரூ.250 […]
தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் இன்றும், நாளையும் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்,புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து கொரோனா பரவல் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதன் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கடற்கரைகளில் இன்று இரவு பொதுமக்கள் […]
சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தற்போது காணொலி காட்சி மூலம் ,சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி கோயில்களில் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்படி,இக்கோயில்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படும்.குறிப்பாக,ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவணித்திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் கொரோனா பரவலைத்தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவணித்திருவிழா நிகழ்வுகளை பக்தர்கள் வீட்டிலிருந்தே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனோ வைரஸ் தொற்று உலகம் முழுவது மின்னல் வேகத்தில் பரவி தனது கோரத்தை அரங்கேற்றி வருகிறது.இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் பல்லாயிரக்கணக்கானோர் அப்பாவி மக்கள் உயிரிழந்து உள்ளனர். உலகமே கொரோனாவை கண்டு கடும் அச்சத்தில் உள்ளது.இந்தியாவில் இதன் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது கவலை அளிக்கிறது.இதன் மின்னல் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது.ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் மக்கள் ஒன்றுக்கூடும் வழிபாடுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆனால் முறைப்படி […]
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்து அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திருவிழா கொடிப் பட்டமானது திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக எடுத்து சென்று மீண்டும் காலை 5.10 மணிக்கு கோயிலுக்கு வந்தடைந்தது.பின்னர் கொடிமரத்தில் காப்பு கட்டி திருவிழா கொடியினை ஏற்றினாா்.அதன்பின்னா் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. […]
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரம் ஆனாலும் பழமுதிர் சோலை மரமாவேன் முருகா…என்ற பாடலுக்கு ஏற்ப அற்புத ஆன்மீக இடமாகத் திகலும் திருச்செந்தூர். தைப்பூசத் திருவிழாவானது வரும் 8ந்தேதி கோலகலமாக துவங்குகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் வருகின்ற 8ம் தேதி நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான இந்த தலத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற 8ம் தேதி தைப்பூச திருவிழாவானது சிறப்பாக […]
திருச்செந்தூரில் வாகன விபத்துகளை குறைக்கும் வகையிலும்,இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் காவல் துறை மற்றும் பெட்ரோல் அசோசியேஷன் இணைந்து ஜூன்-1 முதல் பெட்ரோல் போட வருவோர் நிச்சயம் ஹெல்மெட் உடன் வரவேண்டும் என்று புதிய முயற்சியை தொடங்கவுள்ளனர். இதன் ஒரு முன்னோட்டமாக இன்றைய தினம் “மகிழ்ச்சி நேரம்” என்ற தலைப்பில் காலை 9 மணி முதல் 12 மணி வரை ஹெல்மெட் அணிந்து கொண்டு பெட்ரோல் போடா வருவோர்க்கு இலவசமாக 1 லிட்டர் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 3ம் நாளான நேற்று சுப்ரமணியசுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துகிடா வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.இந்நிலையில்நேற்றிரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து காட்சியளித்தனர். முருகப்பெருமானின் 6 படை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. DINASUVADU