கிராமப்புற பகுதியில் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கப்படும் – அமைச்சர் ராஜகண்ணப்பன்!

Minister Rajakannappan has said that the bus which was stopped during the AIADMK rule in the rural areas will be re-operated.

கிராமப்புற பகுதியில் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்தில் திமுக சார்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் தேர்தல் பரப்புரையை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கியுள்ளார்.

அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியின் பொழுது சுமார் 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் அதிரடியான பல நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக கொரோனா தொற்று குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக கிராமப்புற பகுதிகளில் அதிமுக ஆட்சியில் இயக்கப்படாமல் இருந்த அரசு பேருந்துகள் விரைவில் இயக்கப்பட திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தேவையான புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.