ஆந்திரா: திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, சித்தூர் மாவட்டம் கங்கசாகரம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது சுற்றுலா வேன் மோதி பயங்கர விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை சித்தூரில் நடந்துள்ளது. இந்த விபத்தில், திருச்சியைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். தற்போது, காயமடைந்தர்களில் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் […]
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம் தேதி பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்த நிலையில், அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர, ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் 14,104 […]
கர்நாடகா : தினம் தினம் வித்தியாசமாக சிலர் வழக்கு தொடர்ந்து நீதி மன்றத்தில் நிவாரணம் கோரி அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டு வரும் செய்திகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். அப்படி தான், மங்களூரில் தீபிகா என்ற பெண் பூச்சி கடிதத்திற்கு வழக்கு போட்டு ரூ.1.29 லட்சம் இழப்பீடு வாங்கி இருக்கிறார். இந்த வழக்கு குறித்து விவரமாக பார்ப்போம்… கடந்த 2022-ஆம் ஆண்டு தீபிகா என்ற பெண்ணும் அவரது கணவரும் ரெட் பஸ் செயலி மூலம் மங்களூருவில் இருந்து பெங்களூருக்கு […]
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி இடம் மாற்ற மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக பிராட்வே – முகப்பேர் (7M), வடபழனி – தரமணி (5T) ஆகிய இரு வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டு சென்னை மாநகராட்சியிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக சிக்னல் […]
ஜம்மு காஷ்மீர் : அமர்நாத் யாத்ரீகர்கள் பயணத்தின் போது பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் பெரும் விபத்தில் பயணிகள் தப்பினார்கள். தேசிய நெடுஞ்சாலை 44 இல் ராம்பன் மாவட்டத்தில் செவ்வாயன்று இந்த சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. அங்கு அமர்நாத்திலிருந்து 40 பயணிகள் ஏற்றிக்கொண்டு ஹோஷியார்பூருக்குபேருந்து ஒன்று சென்றது. ஹோஷியார்பூருக்கு சென்று கொண்டிருந்த அந்த பேருந்து அதன் பிரேக்கை இழந்தது, இதனால் 40 பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. முயற்சியில் யாத்ரீகர்கள் நகரும் பேருந்தில் இருந்து வேகமாக குதிக்கவும் தொடங்கினார்கள். […]
லக்னோ : லக்னோவின் வசீர்கஞ்ச் பகுதியில் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது பின்னால் வந்த பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின் திடுக்கிடும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி தற்போது இணையத்தில் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. விபத்து நடந்த பிறகு, பேருந்து ஒரு கணம் மெதுவாகச் சென்றது, ஆனால் பாதிக்கப்பட்டவரைச் சரிபார்க்க டிரைவர் நிறுத்தாமல், அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றார், விபத்து வசீர்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நகர முதியோர் […]
சென்னை : பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கவும்; பழுதடைந்த பேருந்துகளை பழுதுபார்த்தும் மக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் ” தமிழ் நாட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் தங்களுடைய பயணங்களை […]
Bus Accident: ஹரியானா மாநிலம் மகேந்திரகரில் உள்ள உன்ஹானி கிராமம் அருகே மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிரமாக விசரணையில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த குழந்தைகள் தற்போது அவசர மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.
மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, படியில் தொங்கிகொண்டு பயணம் செய்வதை தடுக்கும் வகையில், முதற்கட்டமாக 200 பேருந்துகளுக்கு தானியங்கி கதவுகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்குவதை தவிர்க்க படிக்கட்டுகளின் […]
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தமிழ்நாடு மாநிலம் அரசுப் பேருந்தும், கேரளா மாநிலம் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதாவது, தமிழக அரசு பேருந்து ஒன்று களியக்காவிளையிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருக்கையில், அதேபோல் எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசுப் பேருந்தும் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஒன்றுக்கு ஒன்று எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. பஞ்சாப் ஆளுநர் […]
15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இன்றும் 2வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இந்த […]
உத்திரபிரதேசத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரசு பேருந்துகள் இயங்காது என உ.பி அரசு தெரிவித்துள்ளது. டெல்லி, இமாச்சல், உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகரில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடுமையான பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி டெல்லியில் ஏற்கனவே கடும் பனிமூட்டம் காரணமாக சாலை போக்குவரத்துகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது உத்திரபிரதேசத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரசு […]
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து நேற்று ஒரே நாளில் 3300 அரசு பேருந்துகளில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வெளியூர் பயணம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து நேற்று ஒரே நாளில் 3300 அரசு பேருந்துகளில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து மூன்று நாட்களுக்கு தினமும் தலா 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்பு பேருந்துகள் என 10 ஆயிரத்து 518 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து இன்று முதல் 23ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் […]
ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆயுத பூஜை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக செப்டம்பர் 30, அக்டோபர் 1-ஆம் தேதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கோயம்பேடு உள்ளிட்ட மூன்று பேருந்து நிலையங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 2,050 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். மேலும் சென்னை தவிர்த்து பிற ஊர்களில் […]
புனேயில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதியதில் ஒருவர் பலி, 4 பேர் காயம். ஞாயிற்றுக்கிழமை(செப் 18) இரவு சாஸ்வத் சாலையில் மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்எஸ்ஆர்டிசி) ஷிவ்ஷாஹி பேருந்து கண்டெய்னர் டிரக் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். பஸ் பந்தர்பூரில் இருந்து புனே ஸ்வர்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. விபத்தில் சிக்கிய இரு வாகனங்களும் கிரேன்கள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு பேருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்.சிலர் தெரிந்தே, கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. இ விபத்தினை தவிர்க்க பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்குமாறு கோரிக்கைகள் எழுந்தது. இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில் 21,000 பேருந்துகள் இருக்கிறது. பண்டிகை காலங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு பேருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்.சிலர் தெரிந்தே, கூடுதல் கட்டணம் […]
பெண்கள் இலவசமாக பயணிக்கும் பேருந்துகள் முழுவதுமாக பிங்க் நிறத்திற்கு மாற்றம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பேருந்தில் பயணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து பெண்கள் இலவசமாக பயணித்து வந்த நிலையில், தமிழகத்தில் கட்டணப் பேருந்தா அல்லது இலவச பேருந்தா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மகளிர் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளை பிங்க் நிறத்தில் வண்ணம் பூசி முதல் கட்டமாக 60 பேருந்துகள் நடைமுறைக்கு வந்தது. இந்த பேருந்துகளின் முன்பக்கம் […]
கேரளாவில் நாளை முதல் பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து, பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என்று சமீபத்தில் கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய […]
பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்க திட்டமிட்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. தமிழகத்தில் பேருந்துகளில் அடுத்து வரும் நிறுத்தம் குறித்த அறிவிப்பை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு பேருந்துகளில் கேமரா பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்து வரும் பஸ் ஸ்டாப்புகள் குறித்து அறிவிக்க […]