வங்கி கணக்குகளை முடக்கக்கோரி ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம்.
அதிமுகவின் கரூர் வைஸ்யா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்வரை வங்கி கணக்குகளை முடக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின்படி, தற்போது வரை தாம் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு சட்டத்திற்கு புறம்பானது. சட்டவிதிகளை மீறி திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. எனவே, அதிமுகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.