#Breaking:சென்னை வாசிகளே...பொது இடங்களில் இவை கட்டாயம் – மாநகராட்சி போட்ட உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும்

நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

unknown node

அந்த வகையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்றும்,கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது.

unknown node

இந்நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.அந்த வகையில்,வணிக வளாகங்கள்,தியேட்டர்கள்,துணிக்கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்,கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும்,வணிக நிறுவனங்கள் தங்களது அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

#Breaking:சென்னை வாசிகளே...பொது இடங்களில் இவை கட்டாயம் – மாநகராட்சி போட்ட உத்தரவு!