Breaking:பாஜகவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு,ஹெச்.ராஜா ஆகியோருக்கு புதிய பொறுப்பு...!

Breaking: Former Union Minister Pon. Radhakrishnan, Khushbu, H. Raja new responsibility in BJP ...!

பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,குஷ்பு ஹெச்.ராஜா ஆகியோருக்கு அக்கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜேபி நட்டா இன்று பாஜக கட்சியின் தேசிய அளவிலான உறுப்பினர்கள் நியமனம் குறித்து இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி,பாஜக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல,தேசிய செயற்குவுக்கான சிறப்பு அழைப்பாளராக குஷ்பு,ஹெச்.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,உத்தரப்பிரதேச எம்எல்ஏ ராஜேஷ் அகர்வால் தேசிய பொருளாளராகவும்,புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களை தேசிய செயற்குழு உறுப்பினராகவும்,நியமித்து ஜேபி நட்டா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

unknown nodeunknown node