மக்களவை தேர்தல் : 2024 மக்களவை தேர்தலின் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்பொழுது, முன்னிலை விவரங்கள் மற்றும் வெற்றி வெற்றிப்பாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டே வருகிறது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 4,15,867 வாக்குகள் பெற்று 1,49,503 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 266364 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் […]
கன்னியாகுமரி மக்களவை தொகுதி: 5 -வது சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 123284 வாக்குகள் பெற்று 47611 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அதற்கு அடுத்தபடியாக, பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) – 75673 வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். மேலும், பசிலியான் நசரேத் (அதிமுக) – 10850 வாக்குகளும் மரிய ஜெனிபர் (நாதக) – 10796 வாக்குகளுடன் பின்னடைவில் உள்ளனர்.
மக்களவை தேர்தல்: நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு தற்போது ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். கன்னியாகுமரி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 5,500 வாக்குகள் […]
Election2024 : மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தமிழகத்தின் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மேலும் கூடுதலாக நான்கு தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. இதில், முதற்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் […]
கன்னியாகுமரியில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டி இருந்தார். இது குறித்து பொது மேடையில் விவாதிக்க தயார் என தமிழக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் பதில் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் கனிம வள கொள்ளையில் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் பெயர் சரித்திரத்தில் நிலைத்து இருக்கும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அண்மையில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், தமிழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்கள் கடமையை […]
பொன்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரியில் பாஜகவினர் போராட்டம். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பாஜக நிர்வாகியை திருநெல்வேலி திமுக எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவர் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பாஜக நிர்வாகி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் பாஜக நிர்வாகியை சந்தித்து நலம் விசாரித்தார். பாஜக நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து திமுக எம்பி ஞானதிரவியத்தின் மீது கொலை வழக்கு […]
திருநெல்வேலி மாவட்ட திமுக எம்.பி ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பாஜக நிர்வாகி பாஸ்கர் என்பவர், திருநெல்வேலி திமுக எம்பி ஞானதிரவியம் மற்றும் அவர் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பாஸ்கர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஸ்கரை நேற்று நள்ளிரவு […]
பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,குஷ்பு ஹெச்.ராஜா ஆகியோருக்கு அக்கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜேபி நட்டா இன்று பாஜக கட்சியின் தேசிய அளவிலான உறுப்பினர்கள் நியமனம் குறித்து இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி,பாஜக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல,தேசிய செயற்குவுக்கான சிறப்பு அழைப்பாளராக குஷ்பு,ஹெச்.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும்,உத்தரப்பிரதேச எம்எல்ஏ ராஜேஷ் அகர்வால் தேசிய பொருளாளராகவும்,புதுச்சேரி உள்துறை […]
பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. பொதுவாக மறைந்த தலைவர்களுடைய நல்ல கருத்துக்களை நாம் ஏற்று பின்பற்ற வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நாகர்கோவில் மாநகர் வடக்கு மண்டல் சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. பொதுவாக மறைந்த தலைவர்களுடைய நல்ல கருத்துக்களை நாம் ஏற்று பின்பற்ற வேண்டும். வ.உ.சி சிலை, மணிமண்டபம், தூத்துக்குடி மாவட்டத்தில் […]
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அவர்களுக்கு,முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து,ஆர்.என்.ரவி அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அவர்களுக்கு,முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “தமிழக ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும், முன்னாள் தேசிய பாதுகாப்பு […]
ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாககிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். இதனையடுத்து,அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மருத்துவமனைக்கு சென்று, ஓபிஎஸ் மனைவி விஜயலக்ஷ்மி உடலுக்கு மரியாதை செலுத்தி,ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.மேலும்,அதிமுக கட்சி நிர்வாகிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து,முதல்வர் ஸ்டாலின் அவர்களும் நேரில் சென்று […]
முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களின் மறைவிற்கு முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.அவருக்கு வயது 87.இதனையடுத்து,அவரது உடல் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் கட்சியினர், பொதுமக்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டு உள்ளது. மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவரது குடும்பத்தினருக்கு காங்கிரஸ் மற்றும் பிற கட்சியினர் இரங்கல் தெரிவித்து […]
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த கொரோனாவால் பல அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வருகின்ற நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
என்னுடைய தந்தை குறித்து மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியுள்ளார் என்று பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றசாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், சரக்கு பெட்டகம் மாற்றுமுனையம் வராது என அறிவித்தும், திமுகவினர் மக்களிடையே போராட்டத்தை தூண்டிவிடுகின்றனர். கன்னியாகுமரி தொகுதியை பற்றி ஸ்டாலினுக்கு என தெரியும்? என தொகுதி மக்களுக்கு எதும் செய்யவில்லை என ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். நெல்லை எங்கள் எல்லை, குமாரி எங்கள் தொல்லை என்று கூறியது திமுக. பொன்.ராதாகிருஷ்ணன் […]
பொன்.ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பரஸ்பரம் கைகுலுக்கி வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலும் ஒரே நாளில் நடைபெறுகிறது. இந்நிலையில், தற்போது இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் என்பதால் வேட்புமனு தாக்கல் விறுவிவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரவிருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டிடவுள்ளனர். இந்நிலையில், […]
இன்று பொன்.ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ் எம்.பி எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாகவுள்ளது. அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுடன் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியையும் ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜக. சார்பில் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டது. […]
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. நேற்று அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் இதுவரை பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே போட்டியிட்டுள்ளார். இதில் 7 முறை போட்டியிட்டு 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 5 முறை […]
அதிமுகவின் திட்டத்தை யாரோ வெளியிடுகிறார்கள், அதனால் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணனிடம், நான் சொல்வதை எல்லாம் முதல்வர் பழனிசாமி செய்து வருவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றசாட்டிக்கிறார் என்ற கேள்விக்கு, அப்போ அதிமுகவும், அரசாங்கமும் கவனமாக இருக்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளார். அதிமுகவின் திட்டத்தை யாரோ வெளியிடுகிறார்கள், அதனால் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் […]
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இப்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி எனவும் , எதிர்காலத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமையலாம் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் 2021சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி அமையும் என அவர் தெரிவித்தார். இப்போது வைக்கப்பட்டுள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி, சட்டமன்றத்துக்கு கூட்டணி அமைக்கப்படும். அது அதிமுகவுடன் இருக்கலாம், […]
புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி என்று பொன் .ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது.இதனிடையே தான் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில், பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று […]