#BREAKING: புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு... மீறினால் சட்டப்படி நடவடிக்கை.!

The district administration has issued an order banning 144 one day tomorrow as Prime Minister Modi is coming to Puducherry.

புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வரவுள்ளதால் நாளை ஒருநாள் 144 தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள நாளை புதுச்சேரி வருகிறார். நாளை மாலை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேசிய முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக புதுச்சேரியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்கனவே போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக புதுச்சேரி வான்வெளியில் நாளை விமானங்கள், டிரோன்கள் உள்ளிட்டவை பறக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.