முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 9 இடங்களில் முன்னிலை. புதுச்சேரியில் உள்ள மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் அதிமுக, பாஜக இடையே கூட்டணியும், திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணியும், மற்றும் அமமுக தனித்தும் இந்த தேர்தலில் களம்கண்டுள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் […]
புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 2 தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யவேண்டும் என்றும் நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், புதுச்சேரி தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள […]
வாக்காளர்களுக்கு பல்க் எஸ்எம்எஸ் அனுப்பியது எப்படி? என புதுச்சேரி மாநில பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதியின்றி வாக்காளர்களுக்கு பல்க் எஸ்எம்எஸ் அனுப்பியது எப்படி? என புதுச்சேரி மாநில பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கட்சியினர் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டதாக புதுச்சேரி பாஜக பதில் அளித்துள்ளது. ஆதார் விவரங்களை புதுச்சேரி பாஜக திருடவில்லை என ஆதார் ஆணையம் விளக்கம் அளித்ததை தொடர்ந்து, பாஜகவுக்கு எதிரான புகார் மீதான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடரலாம் […]
புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வரவுள்ளதால் நாளை ஒருநாள் 144 தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள நாளை புதுச்சேரி வருகிறார். நாளை மாலை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேசிய முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக புதுச்சேரியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்கனவே போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை 144 […]
புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்க கூடாது? என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வாக்காளர்களின் செல்போன் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைப்பதை தடுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. பாஜகவில் சேறுமாறும், வாக்களிக்குமாறும் குறுந்தகவல் வருவதாக புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கர் தலைவர் ஆனந்த் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதில் அதிருப்தி அடைந்த உயர் நீதிமன்றம், வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்தது எப்படி? என்று கேள்வி எழுப்பி, […]
புதுச்சேரியில் பாஜக சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி வருகின்ற சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து சந்திக்கவுள்ளனர். இதில், புதுச்சேரியில் உள்ள மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா் காங்கிரஸ் 16, பாஜக 9, அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிடவுள்ளனர். இந்நிலையில், பாஜக சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி” என்ற தலைப்பில் 50,000 பேரிடம் கருத்துக்கள் கேட்டு […]
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், நேரு ஆகியோர் நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 3 பேரையும் நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, […]
வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. வேட்பாளர்களை முன்கூட்டி அறிவிக்காமல் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடம் வேட்பாளர் பட்டியலை என்.ஆர் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் மொத்தமுள்ள 30 தொகுதியில் 16 தொகுதியில் […]
கூட்டணியில் இருந்து விலகிய பாமக முதற்கட்டமாக 9 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. வருகின்ற சட்டமன்றத் தோ்தலை என்.ஆா்.காங்கிரஸ் தலைமையில் பாஜக மற்றும் அதிமுக சந்திக்கவுள்ளனர். புதுச்சேரியில் உள்ள மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ் 16 தொகுதிகளும், மீதமுள்ள 14 தொகுதிகளில் பாஜக, அதிமுக, பாமக போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனால், பாஜக-அதிமுக மற்றும் பாமக இடையே […]
புதுச்சேரியில் 5 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு புதுச்சேரியில் உள்ள 30 தொகுதியில் 16 இடங்கள் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிட உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 தொகுதிகளில் அதிமுக, பாஜக உடன்பாடு ஏற்படுத்திக்கொள்வதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. வருகின்ற தேர்தலில் அதிமுகவிற்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக திட்டவட்டமாக உள்ளது. ஆனால் அதிமுக சார்பில் 7 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். பாஜக வருகின்ற தேர்தலில் 11 தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதால் […]
புதுச்சேரி சட்டப்பேரவையில் போட்டியிடும் தேமுதிகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக -காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ் -அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உள்ளது. இந்து தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டிருந்தார். அதன்படி, பாகூர் எஸ்எஸ்பி வேலு, காலாப்பட்டு எஸ் ஹரிஹரன், உப்பளம் வி சசிகுமார், நெடுங்காடு ஏ ஞானசேகர், திருநள்ளார் கே ஜிந்தாகுரு ஆகிய […]
புதுச்சேரி மாநிலத்தில் 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கடந்த 11ம் தேதி உடன்பாடு கையெழுத்தானது. புதுச்சேரியை பொறுத்தளவில் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு 15, திமுக 13, சிபிஐ 1, விசிக 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுதாகிருந்தது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. […]
பாஜக, அதிமுகவிற்கு 3 தொகுதிக்குள் மட்டுமே ஒதுக்கப்படும் என கூறுவதால் தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ளது. புதுச்சேரில் உள்ள 30 தொகுதியில் 16 இடங்கள் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிட உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 தொகுதிகளில் அதிமுக,பாஜக உடன்பாடு ஏற்படுத்திக்கொள்வதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. வருகின்ற தேர்தலில் அதிமுகவிற்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக திட்டவட்டமாக உள்ளது. ஆனால் அதிமுக சார்பில் 7 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். […]
புதுச்சேரியில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதிகள் தற்போது அறிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்து, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பிடித்துள்ள இந்திய ஜனநாயக கட்சி முதல்கட்டமாக 20 சட்டப்பேரவை தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, சேப்பாக்கம், செங்கல்பட்டு, காட்பாடி, குடியாத்தம், அரூர், செங்கம், கலசப்பாக்கம், மயிலம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சங்கராபுரம், வீரபாண்டி, குளித்தலை, பெரம்பலூர், […]
புதுச்சேரியில் அமமுக போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 06.04.2021 அன்று நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்காணும் தொகுதிகளுக்கு கீழ்காண்பவர்கள் பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் முன்னேற்றக் கழகத்தின் முதற்கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளது. C.தனவேலு – மண்ணாடிப்பட்டு முத்தாலு வெங்கடேசன் – ஊசுடு SC B.விமலாஸ்ரீ – தட்டஞ்சாவடி ட.முனுசாமி – […]
அதிமுக பொறுப்பாளர் தமிழக அமைச்சர் எம்.சி சம்பத், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடம் கூட்டணி குறித்த உடன்பாடு நடைபெற்றது. அதில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக- அதிமுக கூட்டணியில் வருகின்ற தேர்தலை சந்திக்க உள்ளனர் எனவும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக- அதிமுக -14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ரங்கசாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து,வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என அதிமுக நிர்வாகிகள் […]
புதுச்சேரியில் தேமுதிக தனித்து போட்டியிடம் என மாநில செயலாளர் விவிபி வேலு தகவல் அளித்துள்ளார். ஏற்கனவே புதுச்சேரியில் திமுக -காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ் -அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உள்ளது.இதற்கிடையில், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியோர் இணைந்து தேர்தலை சந்திக்கின்றனர். இதனால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணியில் இணையுமா..? அல்லது தனித்து போட்டியிடுமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில், தேமுதிக தனித்து […]
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிரணி என இரு கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து தொகுதி பங்கீடு இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், 3வது அணியாக மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சுசி கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட […]
புதுச்சேரி, காரைக்கால் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம். தமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநிலகங்களில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கூட்டணி, தொகுதி பங்கீடு, போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நேர்காணல் என தேர்தல் பணி தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, திமுக ஒருபக்கம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. மறுபக்கம் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வேட்பாளர் நேர்காணல் நடத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி […]
என்.ஆர் காங்கிரசுடன் கூட்டணி பேச்சு இழுபறியில் உள்ள நிலையில் தேர்தல் அறிக்கை பற்றி ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியாக இணைந்து தேர்தலை ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து விலக என்.ஆர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதால் என்.ஆர் காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளனர். பாஜக […]