பேச்சுவார்த்தை இழுபறி..! அதிக இடங்களை கேட்கும் பாஜக..? மறுக்கும் அதிமுக ..?

Negotiations between AIADMK and BJP over seat distribution in urban local body elections have dragged on.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட் பங்கீடு தொடர்பாக அதிமுக மற்றும் பாஜக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று, இன்று சென்னை கமலாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுக மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக – பாஜக 3 மணி நேரமாக  பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தையில் கோவை, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில் ஆகிய 4 மாநகராட்சிகளையும், நகராட்சிகளில் 30% இடங்களை பாஜகவுக்கு ஒதுக்கும்படி அக்கட்சி வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜகவுக்கு அதிக இடங்களை வழங்க அதிமுக மறுத்து வருவதாகவும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்க அதிமுக தயார் என தகவல் வெளியாகியுள்ளது.