உபி,பஞ்சாப்,கோவா,மணிப்பூர்,உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.அதைப்போல, உத்தரகாண்ட்,கோவா ஆகிய மாநிலங்களில் பிப்.14 ஆம் தேதியும்,பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.மேலும்,மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில்,உத்தர பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டில் […]
உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. இதில், உ.பி-யில் 7 கட்டங்களாகவும், மணிப்பூரில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் 117 தொகுதிகளில், ஆம் ஆத்மி : 76 – 90, காங்கிரஸ் : 19 […]
உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.அதன்படி,உ.பி-யில் ஏற்கனவே 6 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்,இன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி,பிரதமர் மோடியின் வாரணாசி,ஜான்பூர்,காசிப்பூர் உள்ளிட்ட 54 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் 23,000-க்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த வாக்குபதிவில், […]
தமிழகத்தில் மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்.19 ஆம் தேதியன்று நடைபெற்ற நிலையில்,பிப்.22 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து,மேயர் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை […]
உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி,அமேதி உள்ளிட்ட உள்ள 61 தொகுதிகளுக்கு 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியது. உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.அந்த வகையில் இதுவரை நான்கு கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில்,உத்தரப்பிரதேசத்தில் உள்ள 61 தொகுதிகளுக்கு 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு சற்று முன்னர் காலை 7 மணிக்கு தொடங்கியது.அயோத்தி, அமேதி உள்ளிட்ட 61 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த 5 ஆம் கட்ட தேர்தலில் 693 வேட்பாளர்கள் களத்தில் உள்ள […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 74,416 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் பதவியிடங்களுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான நேற்று வரை மொத்தம் 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19-ஆம் […]
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொளி வாயிலாக வரும் 6-ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் […]
தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரி 28-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு பரிசீலினை நாளை நடைபெற உள்ள நிலையில், மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் பிப்.7ம் தேதியாகும். 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்.19-ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற […]
சென்னை மாநகராட்சியில் திருமண கோலத்தில் பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள் என்பதால் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் நடைபெறும் தேர்தலின் போது சில வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலை வித்தியாசமான முறையில் தாக்கல் செய்வார்கள். இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 162 வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் […]
விருதுநகர் 28-வது வார்டில் குடிநீர் பிரச்னை உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். விருதுநகர் 28-வது வார்டில் டி.சி.கே பெரியசாமி தெரு, சோனை கருப்பன் தெரு, வாடியான் தெரு, சின்னையாபள்ளிக்கூட தெரு, பெரிய காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் நீர் வசதி இல்லாததால் பக்கத்து தெருக்களுக்கு செல்கின்றனர். சாக்கடைகள் குறுகலாகவும், ஆழப்படுத்தாமலும் உள்ளது. இப்பகுதி மக்களுக்கு நுாலகம், சிறுவர் பூங்கா தேவையாக உள்ளது. பாதாளசாக்கடை தொட்டி மூடிகள் தரமின்றி உள்ளதால் உடைக்கின்றன. சாக்கடையை […]
சென்னை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் பட்டியலினத்தை சேர்ந்த 16 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.இதனையடுத்து,பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. […]
நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ணா போன்று வேடம் அணிந்த கலைஞர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிட பிரபல கானா பாடகர் கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6-ஆவது மண்டலம், 72-ஆவது வார்டில் சுயேட்சையாக போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே கடந்த 2006 மற்றும் 2011 தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்திருந்த நிலையில், தற்போது 3-வது முறையாக அதே வார்டில் போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. […]
காங்கிரசும், சமாஜ்வாதியும் இணைந்தால் கூட பாஜகவை வீழ்த்த முடியாது உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியா தெரிவித்தார். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலையொட்டி சட்டசபை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனாவின் பரவல் காரணமாக தேர்தல் ஆணையம் பேரணிகள் மற்றும் பிரச்சாரத்திக்கான தடையை பிப்ரவரி 11 வரை நீட்டித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 10 தேதி நடைபெறுகிறது. […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. ஒரு மாநகராட்சி ஒரு […]
நகர்ப்புற உள்ளாட்சியில் சென்னை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் 100 வேட்பாளர்களின் பட்டியலை தேமுதிக வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது தேமுதிக. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் நிலையில், திருப்பூரை தொடர்ந்து சென்னைக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தேமுதிக திருப்பூர் மாநகராட்சியில் 24 வார்டுகளில் போட்டியிடும் […]
தமிழகத்தில் 11ம் தேதி வரை பேரணிக்கு தடை விதிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் […]
அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 10 நாட்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரடி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கான இட பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை மாவட்ட வாரியாக அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் […]
பிப்ரவரி 11 வரை ஊர்வலம், மிதிவண்டி பேரணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்டில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு , கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதியும், பஞ்சாப்பில் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 20-ஆம் தேதியும், மணிப்பூரில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் […]
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் கூட்டணியில் போட்டியிடக்கூடிய கூட்டணி கட்சிகளுக்கான இட பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 4-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதற்கிடையில், சில கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றனர். இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் […]