முதல்வர் ஸ்டாலின் குணமடைந்து மக்கள் பண்ணிக்கு திரும்ப வேண்டும்.! – பாஜக தலைவர் அண்ணாமலை டிவீட்...

கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிவீட் டிவீட் செய்துள்ளார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிவீட் டிவீட் செய்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் அவர்களே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

மேலும், அனைவரும், பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நான் தனிமைப்படுத்திகொண்டேன் என பதிவிட்டுள்ளார்.

முதல்வர் மீண்டும் குணமடைந்து வர வேண்டும் என பலரும் டிவிட்டர் மூலமும், அறிக்கை மூலமும் கூறி வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் தனது டிவிட்டர் பக்கத்த்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.’ என கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

unknown node