கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவலர்கள் அனைவருக்கும் 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
கொரோனா நெருக்கடி காலகட்டத்திலும் முன்களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவலர்கள் அனைவருக்கும் 5,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உலகில் மட்டுமல்லாமல் இந்தியா, தமிழகம் என பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையில் காவலர்கள் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கடமையாற்றி வருகின்றனர்.
அவர்களது இன்றியமையாத பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும் காவல்துறையை சேர்ந்த இரண்டாம் நிலை காவலர்கள் முதல் ஆய்வாளர் வரையிலான அனைத்து காவலர்களுக்கு 5,000 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை அளிக்க முதல்வர் உதவிட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் ஸ்டாலின் அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
unknown node