Tag: incentive

குட் நியூஸ்.. குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 – நிதியமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவிப்பு. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் ஊக்கத்தொகை தரும் திட்டத்திற்காக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இந்த திட்டத்தை கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றி […]

#TNGovt 2 Min Read
Default Image

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியீடு. ஐஏஎஸ் மற்றும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டு, அதற்கான அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. அதன்படி, ஐஏஎஸ்,  குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளில் ஊக்கத்தொகை பெற தகுதிவாய்ந்த 39 மாணவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

#IAS 2 Min Read
Default Image

#Breaking:போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு “சாதனை ஊக்கத்தொகை” – போக்குவரத்துத் துறை முக்கிய அறிவிப்பு!

பொங்கல் திருநாளை முன்னிட்டு 1,19,161 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.7.1 கோடி “சாதனை ஊக்கத்தொகை” வழங்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு இலட்சத்து 19,161 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு மொத்தம் 7 கோடியே 1 இலட்சம் ரூபாய் ‘சாதனை ஊக்கத்தொகை’ வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் […]

#TNGovt 6 Min Read
Default Image

RuPay டெபிட் கார்டு, BHIM UPI டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பரிசு – மத்திய அரசு

RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலம் சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கு ஊக்கப்பரிசு வழங்க மத்திய மாச்சரவை ஒப்புதல். Rupay டெபிட் கார்டு, BHIM UPI மூலம் சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தவதற்கு ஊக்கப்பரிசு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு ஊக்கப்பரிசு வழங்க ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. ரூபே டெபிட் கார்டு மற்றும் BHIM UPI மூலம் சிறிய அளவிலான […]

BHIM UPI 3 Min Read
Default Image

அக்.15க்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை – சென்னை மாநகராட்சி

சொத்து வரியை அக்.15க்குள் செலுத்தினால் ரூ.5,000 வரை ஊக்கத்தொகை பெறலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு. 2021-22 ஆம் ஆண்டிற்கான சொத்து வரியை அக்.15க்குள் செலுத்தினால் ரூ.5,000 வரை ஊக்கத்தொகை பெறலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அக்டோபர் 15க்கு பிறகு செலுத்துபவர்கள் தொகையுடன் 2% தனி வட்டி சேர்த்து செலுத்த என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்துவரி செலுத்தி 94,900 பேர் பெற்றுள்ளனர் என்றும் கூறியுள்ளது.

Chennai Corporation 2 Min Read
Default Image

குஜராத் அரசு அறிவிப்பு: மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை..!

மின்சார வாகனங்கள் வாங்குபருக்கு குஜராத் அரசு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. குஜராத்தில் பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனம் மற்றும் கார் ஆகிய வாகனங்களுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 1.50 லட்சம் வரை வழங்குவதாக அறிவித்துள்ளது. குஜராத் அரசு 870 கோடி ரூபாயை வரும் 4 ஆண்டுகளில் 2 லட்சம் மின்சார வாகனங்களுக்கு ஒதுக்கியுள்ளது. மேலும், இருசக்கர வாகனங்களுக்கு 20,000 ரூபாய் வரையும், கார் போன்ற வாகனங்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையும் […]

#Gujarat 2 Min Read
Default Image

காவலர்கள் அனைவருக்கும் 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவலர்கள் அனைவருக்கும் 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். கொரோனா நெருக்கடி காலகட்டத்திலும் முன்களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவலர்கள் அனைவருக்கும் 5,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உலகில் மட்டுமல்லாமல் இந்தியா, தமிழகம் என பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்றின் முதல் மற்றும் […]

#MKStalin 4 Min Read
Default Image