20 தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
20 தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. அதிமுக, திமுகவிற்கு 20 தொகுதிகளை விட்டுக்கொடுத்துள்ளது.மார்ச் 10-ம் தேதி விசிக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும். எந்தெந்த தொகுதியில் போட்டி என்பது ஓரிரு நாட்களில் இறுதிசெய்யப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கடந்த சில நாட்களாக தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு சுலபமான முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.