#ELECTIONBREAKING: அதிமுக கூட்டணி முறிவு.! பாஜக தனித்துப் போட்டி – அண்ணாமலை அறிவிப்பு!

Annamalai announces BJP's sole contest in Tamil Nadu's urban local body elections.

தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி என மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக – பாஜக இடையே உடன்பாடு ஏற்படாததால், தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.  அதிமுக, பாஜக இடையே இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர் இழுப்பறி நீடித்து வந்தது. ஒட்டு மொத்தமாக 25 சதவீத இடங்கள் வரை பாஜக எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், பாஜகவுக்கு 4 அல்லது 5 சதவீத இடங்களை மட்டுமே அதிமுக ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன்பின் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டு வருவதால், பாஜக தரப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடுகிறது. அதிமுக தலைமை மீது எந்த வருத்தமும் இல்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி என்பது தொடர்ந்து நீடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தனிப்பட்ட முறையில் நான் மிகவும் விரும்பும் தலைவர்கள் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி. பாஜகவின் பொது எதிரி திராவிட முன்னேற்றக் கழகம் தான். பாஜக தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி, தனித்து போட்டியிடுவது என்பது கடினமான முடிவு அல்ல, தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளோம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தஹனித்துப்போட்டி என்பதால் அதிமுகவுடன் முறிவு என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜாகாபின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.