இம்மாத இறுதிக்குள் 2,000 மினி கிளினிக் திறக்கப்படும் – முதல்வர்..!

He said 2,000 mini clinics would be opened across Tamil Nadu by the end of this month.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி தமிழகம் முழுவதும் இம்மாத இறுதிக்குள் 2,000 மினி கிளினிக் திறக்கப்படும் என தெரிவித்தார்.

நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டம் கே. வைரவன்பட்டியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அறிவிக்கப்பட்ட 2000 மினி கிளினிக்குகள் எங்கே தொடங்கப்பட்டுள்ளன..? மினி கிளினிக்களுக்கு எத்தனை மருத்துவர்கள் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..? என கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.