பிரச்சாரம் செய்ய 2 நாள் தடை... தேர்தல் ஆணையம் உத்தரவை எதிர்த்து ஆ.ராசா முறையீடு.!

A. Rasa has appealed to the High Court against the 2-day ban on campaigning.

தேர்தல் பிரச்சாரம் செய்ய செய்ய 2 நாள் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா முறையீடு செய்துள்ளார்.

தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் 48 மணிநேரத்திற்கு திமுக எம்பி ஆ.ராசா தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. முதல்வர் பற்றி விமர்சித்தது குறித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஆ.ராசாவின் பேச்சு அருவருக்கத்தக்கதாகவும், தாய்மையை இழிபடுத்தும் வகையிலும் இருப்பதாகவும் தலைமை தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பிரச்சாரம் செய்ய செய்ய 2 நாள் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா முறையீடு செய்துள்ளார்.

ஆ.ராசா தரப்பில் அவசர வழக்காக விசாரிக்க கோரியதை ஏற்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. பிரச்சாரத்திற்கு சில நாட்களே இருப்பதால் நாளை அவசர வழக்காக விசாரிக்க ஆ.ராசா தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.