ஒரே காரில் பயணம்.., புதினுடன் ஆழமான விவாதம் – மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டிற்குப் பிறகு ஒரே காரில் பயணித்தனர்

Narendra Modi - putin

சீனா :பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தனர். சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள மோடி, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ரீதியாக பல்வேறு முக்கிய ஆலோசனைகளையும் நடத்தினார்.

unknown nodeunknown node

உலகின் 3 முக்கிய தலைவர்களான பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி- ஜின்பிங் ஆகியோர் சீனாவில் நடைபெற்று வரும் SCO மாநாட்டில் சந்தித்த போது, எடுக்கப்பட்டது. இந்த சந்திப்பு குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் அதிகளவில் விவாதிக்கப்படும் தலைப்பாக மாறியுள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “SCO உச்சி மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து, ரஷ்ய அதிபர் புடினும், நானும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு ஒன்றாகப் பயணித்தோம். இருவருக்கும் இடையே ஆழமான விவாதம் நடைபெற்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.