சென்னை : ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்றம் மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களால் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த வணிகச் சிலிண்டரின் விலை, தற்போது நாடு முழுவதும் சற்று குறைக்கப்பட்டுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச எரிபொருள் விலை மாற்றங்கள் மற்றும் மாதாந்திர மதிப்பீட்டின் அடிப்படையில், 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி (LPG) சிலிண்டரின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் 19 கிலோ வணிகச் சிலிண்டரின் விலை கணிசமாகக் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த வணிகச் சிலிண்டரின் விலை குறைவு வணிகர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம்போல, வீடுகளில் பயன்படுத்தப்படும் சாதாரண சமையல் எரிவாயு சிலிண்டர்களின் (Domestic LPG) விலையில் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கமான விலையிலேயே தொடர்வது குறிப்பிடத்தக்கது.
