ரெம்டெசிவரால் எந்த பயனும் இல்லை – உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தகவல்..!

There is no use in Remdesivir - World Health Organization Chief Scientist Soumya Swaminathan

ரெம்டெசிவரால் எந்த பயனும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் முதல் சிகிச்சையாக ரெம்டெசிவர் மருந்தினை மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.இதனால்,  ரெம்டெசிவர் மருந்தை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதி வருகிறது

இந்நிலையில்,உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்,தனியார் ஊடகம் ஒன்றுக்கு வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக பேட்டியளித்ததில் கூறியதாவது,”தற்போதைய சூழலில் ரெம்டெசிவர் மருந்தால் எந்தவித பயனும் இல்லை.இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்கு மட்டும் பயன்படுமே தவிர கொரோனா தொற்றை குணப்படுத்தாது.

மேலும்,ரெம்டெவிசிர் மருந்தால் மருத்துவமனையில் தங்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறையும்.எனினும்,அமெரிக்காவில் இது பொருந்துமே தவிர இந்தியாவில் எந்த பலனுமில்லை” என்று  தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து,அதே வீடியோ கான்ஃப்ரன்ஸில் தொற்று நோய் ஆராய்ச்சியாளர் பிரியா சம்பத் குமார் கூறியதாவது,”கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போடுவதால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.அதனால்,பிறக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படாது”,என்று கூறினார்.

இதனையடுத்து,உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா தெரிவித்த கருத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.