ரெம்டெசிவரால் எந்த பயனும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் முதல் சிகிச்சையாக ரெம்டெசிவர் மருந்தினை மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.இதனால், ரெம்டெசிவர் மருந்தை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதி வருகிறது இந்நிலையில்,உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்,தனியார் ஊடகம் ஒன்றுக்கு வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக பேட்டியளித்ததில் கூறியதாவது,”தற்போதைய சூழலில் ரெம்டெசிவர் […]