8 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வருவதை கணித்த நபர்..!! வைரலாகும் ட்வீட்..!!

In 2013, Marco Accordus tweeted "Corona virus .... its coming" on his Twitter page. That tweet is currently going viral

கடந்த 2013 ஆம் ஆண்டு மார்கோ அகார்டஸ் என்பவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” Corona virus….its coming ” என்று ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

சீனாவில் இருந்து “ கொரோனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் சீனாவில் உள்ள உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்ததாக உலகம் முழுவது கொரோனோவால் பல மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகிறார்கள். இதனால் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதன் பிறகு கொரோனா வைரஸ் தாக்கம் இந்த ஆண்டு குறைந்து வந்த நிலையில், மீண்டும் ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டு, குணமடைந்து மற்றும் உயிரிழந்து வருகின்றார்கள்.

கொரோனா பரவலை தடுக்க பல நாடுகள்  தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மார்கோ அகார்டஸ் என்பவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” Corona virus….its coming ” என்று ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வரப்போவதை பதிவு செய்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

unknown node