ரியோ டி ஜெனிரோவில் உள்ள தென் அமெரிக்காவின் மிகப்பெரிய மீன் கண்காட்சி அனைவராலும் கவரப்பட்டது.
சுறாக்களுக்கு இடையே சாண்டா கிளாஸ் உடையணிந்து நீந்தி உணவளித்தது ஆச்சரியதை உண்டாக்கியது.
unknown nodeபிரேசில் நாட்டில் மீன் கண்காட்சியக ஊழியர் ஒருவர் சாண்டா கிளாஸ் போல் உடையணிந்து சுறாக்களுக்கு இடையில் நீந்தி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.
unknown nodeரியோ டி ஜெனிரோவில் உள்ள தென் அமெரிக்காவின் மிகப்பெரிய மீன் கண்காட்சியகத்தில் அதன் ஊழியர் வால்மர் டி அகுயார் சால்வடோர் (Volmer de Aguiar Salvador), சாண்டா கிளாஸ் போல் உடையணிந்து, கண்ணாடி நீர்த் தொட்டிக்குள் நீந்தி அங்குக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல வகையான சுறாக்களுக்கு உணவளித்தார். இதனிடையே அவர் சுறாக்களுக்கு இடையே நீந்திய சாண்டா கிளாசுடன் ஏராளாமான சிறுவர்கள் மற்றும் கண்காட்சியை பார்க்க வந்த அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.