ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது. இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டிற்கு கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று கயானாவில் இருந்து ரியோ டி ஜெனிரோவுக்கு சென்றடைந்துள்ளார். மாநாட்டில் பங்கேற்கபதற்கு ரியோவில் தரையிறங்கய பிரதமர் மோடிக்கு பிரேசில் அரசாங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள் பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா நாட்டிற்கு புறப்பட்டார். அதற்கான தனி விமானத்தில் பிரதமர் மோடி புறப்படும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதற்கு முன்னர் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் பிரதமர் மோடி குறிப்பிடுகையில், “அடுத்த சில நாட்கள், நான் நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா நாடுகளில் இருப்பேன். பல்வேறு நாடுகளுடன் இந்தியாவின் உறவை மேம்படுத்த […]
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை ‘மெட்டா’ நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க் ஜுக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், முறையற்ற வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் எனும் பெயரில் பல முறை ஒரு சில நாடுகளால் குறிப்பாக பிரேசில் நாடு புகார் தெரிவித்தது. அதாவது மெட்டா நிறுவனம், மார்க்கெட்பிளேஸ் எனும் விளம்பரத் தொழில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் தொழிலை ஃபேஸ்புக்கில் புகுத்திய மெட்டா, பயனர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மார்க்கெட்பிளேஸ்ஸை கட்டாயம் […]
பிரேசில் : கடந்த 2022-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில், வெற்றி பெற்ற லுலா டா சில்வா ஜனாதிபதியாக வெற்றிபெறுவதை தடுக்க எதிர்த்து போட்டியிட்ட போல்சனாரோ, சதிச்செயலில் ஈடுபட்டாரா? என பிரேசில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அதே வேளை,ஏற்கனவே மூடப்பட்டிருந்த பல்வேறு போலியான எக்ஸ் கணுக்குகளை எலான் மஸ்க் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டார் எனும் குற்றச்சாட்டை பிரேசிலின் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான […]
பிரேசில் : உலகின் கோடீஸ்வர தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் சமூகத்தளமான ‘எக்ஸ் (X)’ தளத்திற்கு தற்காலிமாக பிரேசில் நாடு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. எலான் மஸ்க், பிரேசில் இடையேயான சர்ச்சை ..! இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில், பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்தில் சில போலி தகவல்கள் பரவியதால் ஒரு சில குறிப்பிட்ட கணக்குகளை முடக்க வேண்டுமென பிரேசில் நாட்டில் உள்ள உச்சநீதீமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்திருந்தார். […]
பிரேசில்: பிரேசிலைச் சேர்ந்த பாலோ கேப்ரியல் டா சில்வா பாரோஸ் மற்றும் கட்யூசியா லீ ஹோஷினோ என்ற அழகான க்யூட் தம்பதியினர் தான் இந்த உலகத்தில் மிக குறுகிய தம்பதியினர் என்று சாதனை படைத்துள்ளனர். இதனால் இவர்கள் உலக கின்னஸ் புத்தகத்திலும் அங்கீகரிக்கபட்டுள்ளனர். கடந்த 2006ம் ஆண்டில் சந்தித்த இந்த காதல் ஜோடி, தங்கள் உறவை மேம்பபடுத்துவதற்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வலுவான பிணைப்பில் இருந்துள்ளனர். மேலும் இந்த 15 வருடங்களில் சமூக அழுத்தங்களுக்கு அடி […]
பிரேசில் நாட்டின் Rio de Janeiro (state) மாகாணத்தில் கடுமையான மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் தேதி முதல் மாகாணத்தின் தெற்கு பகுதியில் கனமழை பெய்கிறது. அதன்படி 42.8 மில்லி மீட்டர் அளவுக்கு கன மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Rio de Janeiro (state) மாகாணத்தின் ஒரு பகுதியான Banguவில் 43.2 மில்லி மீட்டர் என்ற அளவில் மழையானது பதிவாகியுள்ளது. மழை வெள்ளம் காரணமாக […]
பிரேசிலின் அமேசான் பகுதியில் நேற்று காலை சிறிய ரக விமானத்தில் பயணித்த 12 பேர் விபத்தில் உயிரிழந்தனர். கவர்னர் கிளாட்சன் கேமிலியின் பத்திரிகை அலுவலகத்தின்படி, பிரேசிலின் ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோ பிராங்கோவில் உள்ள முக்கிய விமான நிலையம் அருகே விமானம் கீழே விழுந்தது என்று குறிப்பிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்றில், விபத்து நடந்ததாகக் கூறப்படும் அந்த சிறிய விமானம் காட்டில் எரிந்தபடி காட்சிகள் காட்டுகிறது. இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக […]
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82வது வயதில் காலமானார். நவம்பர் 29 அன்று பீலே சுவாச நோய்த்தொற்று மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அதிகாலையில் அவர் உயிர் பிரிந்தது. செப்டம்பர் 2021 இல் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பீலே பிரேசிலுக்காக 92 போட்டிகளில் 77 கோல்கள் மற்றும் மூன்று FIFA உலகக் கோப்பைகளை வென்றுள்ளார். வெறுங்காலுடன் வறுமையில் இருந்து உயர்ந்து நவீன வரலாற்றில் சிறந்த மற்றும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக […]
டைனோசர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு முதலை இனம் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவியலாளர்கள் பிரேசிலில் மிகப்பெரிய முதலை இனத்தின் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளனர். முதலில் இந்த படிமத்தின் அளவு மற்றும் அமைப்பைப் பொறுத்து இது டைனோசர் இனத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. பிறகு இந்த எலும்புக்கூட்டின் தலையை, வைத்து முதலை என கண்டறிந்தனர். சுமார் 72 மற்றும் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைட்டானோசர் எனும் டைனோசர்களுடன் இணைந்து வாழ்ந்த ஒரு மாபெரும் முதலைகளின் முன்னோர் […]
அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி தனது கால்தடங்களை பதிக்க வேண்டும் என பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் அழைப்பு விடுத்துள்ள்ளது. ஃபிபா உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில் கோப்பையை தட்டி சென்ற பிறகு ஏற்கனவே புகழின் உச்சியில் இருந்த அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி தற்போது மேலும் உயரத்திற்கு சென்று விட்டார். அவருக்கு உலகெங்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவருக்கு பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் (Maracanã Stadium) அழைப்பு […]
பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்து 8வது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. ஃபிஃபா உலகக் கோப்பை 2022 தொடரின் 16வது சுற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில், ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி தோஹாவில் உள்ள ஸ்டேடியம் 974-இல் நடந்த 16-வது சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, 8வது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. பிரேசிலுக்காக வினிசியஸ் ஜூனியர், […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு பிரான்ஸ், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் உட்பட 7 அணிகள் முன்னேறியுள்ளன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 பிரிவுகளாக ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. குரூப் சுற்று போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 16 அணிகள் பங்குபெறும் அடுத்த […]
ஃபிஃபா உலகக் கோப்பையில் மீதமுள்ள குரூப் சுற்று ஆட்டங்களில் இருந்து பிரேசில் அணியின் நெய்மர் விலகியுள்ளார். கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் மீதமுள்ள குரூப் சுற்று ஆட்டங்களில் இருந்து கணுக்கால் காயம் காரணமாக பிரேசிலின் நெய்மர் விலகியுள்ளார். ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இல் பிரேசில் அணி, தனது தொடக்க ஆட்டத்தில் செர்பியாவுக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கத்தாரின் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியின் […]
பிரேசில் நாட்டில் இரண்டு பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் மூவர் பலி, 13 பேர் காயம் என தகவல். தென்கிழக்கு பிரேசில் நாட்டில் உள்ள எஸ்பிரிடோ சான்டோ மாகாணத்தில், தலைநகர் விடோரியாவில் இருந்து 50 மைல்கள் வடக்கே அராகுரூஸ் என்ற சிறிய நகரில் குண்டு துளைக்காத ராணுவ உடை மற்றும் முகமூடி அணிந்து வந்த ஒருவர் இரண்டு பள்ளிகளில் திடீரென புகுந்து துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். அராக்ரூஸில் ஒரே தெருவில் அமைந்துள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களைக் கொண்ட […]
கால்பந்து உலகக்கோப்பையை வெல்லும் விருப்ப அணிகளாக பிரேசில், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து என்று மெஸ்ஸி கூறியுள்ளார். கத்தாரில் நவ-20இல் தொடங்கும் கால்பந்து உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, இந்த கால்பந்து உலகக்கோப்பையை பிரேசில், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து அணிகள் வெல்லும் விருப்ப அணிகளாக இருக்கின்றன என்று அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா, தனது ஃபிஃபா உலகக் கோப்பை 2022இந்த முதல் ஆட்டத்தில் நவ-22 அன்று சவுதி அரேபியாவுக்கு எதிராக […]
ஆப்பிரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் குரங்கு அம்மையால் ஏற்பட்ட முதல் மரணம் பதிவாகியுள்ளது. பிரேசிலில் 41 வயதான ஒருவர் குரங்கு அம்மையால் உயிரிழந்துள்ளார். ஆப்பிரிக்காவிற்கு வெளியே நோயால் இறந்த முதல் நபர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேசிலின் சுகாதார அமைச்சகம் கூறுகையில், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 3,750 நோயாளிகளில், 120பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் நேற்று(ஜூலை 29) இறந்துவிட்டதாக கூறினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி,6-வீரர், வீராங்கனைகளுக்கு பிரேசில் செல்ல விமானக் கட்டணமாக தலா ரூபாய் 30-ஆயிரம் வழங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவிப்பு. 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பிரேசில் செல்லும் தமிழகத்தை சேர்ந்த 6-வீரர், வீராங்கனைகளுக்கு விமானக் கட்டணமாக தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள்: “பிரேசில் நாட்டில் வருகிற மே மாதம் […]
ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சோனரா, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோ பங்கேற்றனர். இந்நிலையில் பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள பிரேசில் அதிபர் அலுவலகம், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மார்சிலோ தற்போது நலமாக இருக்கிறார். மேலும், […]
பிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனாவால் ஒரே நாளில் 903 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டாடி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிகமான பாதிப்புகளை சந்தித்த நாடு பிரேசில். இங்கு தொற்று எண்ணிக்கை இந்தியாவை விட குறைவு. ஆனால், பிரேசிலில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியாவை விட அதிகமாக உள்ளது. பிரேசிலில் தற்போது உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 30,671 பேருக்கு கொரோனா […]