வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!  

வாட்ஸ்அப் செய்திகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு கண்காணிக்க முடியும் என மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

Mark Zukerberg

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட் எனும் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  அப்போது அவரிடம் நெறியாளர் பல்வேறு சந்தேகங்களுக்கான பதில்களை கேட்டறிந்தார். அதில் வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் செய்திகள் பற்றியும் கேட்டறிந்தார்.

அதற்கு பதில் அளித்த மார்க், வாட்ஸ்அப்பில் பயனர்கள் அனுப்பும் செய்திகளை  பாதுகாப்பு தேவை ஏற்பட்டால் அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIA  கண்காணிக்க முடியும் முடியும் என்ற தகவலை கூறினார். பயனர்கள் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பும் போது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் போன்ற தகவல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருந்தாலும் செய்திகளை CIA பார்க்க முடியும் என மார்க் கூறினார்.

மேலும், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பது அமைப்பானது பயனர் அனுப்பும் செய்திகளை நிறுவனம் மற்றும் மற்ற யாரும் பார்க்க முடியாதபடி மட்டுமே இருக்கும் . ஆனால் அது அமெரிக்கா CIA-இன் கண்காணிப்பில் இருந்து பாதுகாக்காக்காது  என மார்க் ஸுக்கர்பர்க் கூறினார்.

தற்போதுள்ளபடி, குறிப்பிட்ட கால இடைவெளியில் பயனர்கள் தாங்கள் அனுப்பும் செய்திகளை தானாகவே அழிக்கும் வண்ணம் உள்ள அமைப்பை பயன்படுத்தி தாங்கள் அனுப்பும் தனிப்பட்ட செய்திகளை பாதுகாக்கலாம் என்றும் மார்க் கூறினார்.

அமெரிக்க புலனாய்வு அமைப்பு வாட்ஸ்அப் தரவுகளை நேரடியாக அணுக பெகாசஸ் போன்ற ஸ்பைவேர் கருவிகளை பயன்படுத்துகின்றன என்றும் ஜுக்கர்பெர்க் நேர்காணலில் கூறினார். இந்த கருவிகள் மூலம் மேற்குறிப்பட்ட குறிப்பிட்ட கால இடைவெளியில் அழிக்கப்பட்ட செய்திகளை கூட படிக்கலாம், அழிக்கப்பட்ட புகைப்படங்களையும் பார்க்கலாம் என்றும் அதன் வழி தொடர்புகளையும் கண்காணிக்கலாம் என மார்க் ஜுக்கர்பர்க் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்