நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட் எனும் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் நெறியாளர் பல்வேறு சந்தேகங்களுக்கான பதில்களை கேட்டறிந்தார். அதில் வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் செய்திகள் பற்றியும் கேட்டறிந்தார். அதற்கு பதில் அளித்த மார்க், வாட்ஸ்அப்பில் பயனர்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாப்பு தேவை ஏற்பட்டால் அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIA கண்காணிக்க முடியும் முடியும் என்ற தகவலை கூறினார். பயனர்கள் […]
அமெரிக்கா அனுப்பிய ஆளில்லா விமானம் மூலம் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால்,உலக பயங்கரவாதி, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். அதன் பின்னர் தற்போது, ஒசாமா பின்லேடனின் இரண்டாவது தளபதியும் , தற்போதைய அல்கொய்தா அமைப்பின் தலைவருமான அய்மன் அல்-ஜவாஹிரி இன்று ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த இவரை அமெரிக்க சிஐஏ , ஆளில்லா விமானம் மூலம் கொன்றுவிட்டதாக அமெரிக்க […]
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குநராக கினா ஹஸ்பெல்லை நியமிக்க அமெரிக்க செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ரெக்ஸ் டில்லர்சன் பதவிநீக்கத்தைத் தொடர்ந்து, அந்த பதவியில் சிஐஏவின் இயக்குநர் மைக் போம்பியா நியமிக்கப்பட்டார். இதனால் காலியான சிஐஏ இயக்குநர் பதவியில், துணை இயக்குநராக இருந்த கினா ஹஸ்பெல்லை அதிபர் டிரம்ப் நியமித்தார். இந்நிலையில், கினா ஹஸ்பெல் நியமனம் தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 54 […]
வரலாற்றில் இன்று ஜனவரி 29 , 1946 – பிற நாடுகளின் விவகாரங்களை வேவு பார்க்கும் நோக்கத்தோடு (USA) ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) ஜனாதிபதி டுரூமென் அவர்களால் அமைக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு அடுத்த ஆண்டே CIA என்று பெயர் மாற்றப்பட்டது. இதுவே பின்னர் பிற நாடுகளில் சதி வேலைகளை அரங்கேற்றும் நிறுவனமாகியது.