அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தை தாக்கிய எல்சா புயல்...!

The state of Florida in the United States has been hit by Hurricane Elsa and many surrounding areas have been flooded.

அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தை எல்சா புயல் தாக்கியுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள பல இடங்கள் வெள்ளப்பெருக்கால் சூழப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள தென் கிழக்கு கடற்பகுதியில் புயல் உருவாகியது. இந்த புயலுக்கு எல்சா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் புளோரிடா மாகாணத்தை தாக்கிய நிலையில் அங்கு பெரும் மழை பொழிவு ஏற்படுட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் படிப்படியாக வலுவடைந்து ஜூலை 5 ஆம் தேதி கியூபா தீவை தாக்கியது. அதன் பின் ஜூலை 7ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் உள்ள டெயலர் கவுண்டி பகுதியில் கரையை கடந்துள்ளது. இந்த புயல் காரணமாக ஏற்பட்ட மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.