Plane crash : ரஷ்யாவில் ராணுவ விமானம் குடியிருப்பு கட்டிடத்தில் மோதியதில் 13 பேர் பலி

உக்ரைனுக்கு அருகிலுள்ள தென்மேற்கு ரஷ்யாவில் இராணுவ விமானம் விபத்தில் சிக்கியது 13 பேர் பலி .

ரஷ்ய இராணுவ விமானநிலையத்தில் இருந்து எஸ்யூ-34 சூப்பர்சோனிக் போர்-போம்பர் ஜெட் என்ற பயிற்சி விமானத்தை இயக்கிய போது என்ஜினில் ஏற்பட்ட தீயினால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஏய்ஸ்க் நகரில் குடியிருப்பு கட்டிடம் மீது மோதியது.

இந்த விபத்தில் விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட  13 பேர் உயிரிழந்ததாகவும்,68 பேர் காப்பாற்றப்பட்டுள்னர் ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.விமானத்தில் இருந்த இரு விமானிகளும் விமானம் கட்டிடத்தில் இடிக்கும் முன்னரே வெளியேறிவிட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திங்களன்று ஈரானில் தயாரிக்கப்பட்ட “காமிகேஸ்” ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யா  தலைநகர் கெய்வின் மீது தாக்கியதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர், இதனைத்தொடர்ந்து உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குமாறு மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு உக்ரேனிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்