உக்ரைன் : ஆகஸ்ட் 23ம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக உக்ரைன் செல்லவுள்ளதால், இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உக்ரைன் மீது 2022இல் ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் 2 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் நிலையில், பல்வேறு தரப்பினரும் இந்தியா தலையிட்டு போரை நிறுத்த வலியுறுத்துகின்றனர். சமீபத்தில், ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி […]
உக்ரைன்: பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2022, பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை அவ்வபோது நிகழ்த்தி வருகிறது. நேற்று கூட, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை உட்பட முக்கிய 5 நகரங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். 170க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கீவ் நகரில் உள்ள […]
ரஷ்யா தாக்குதல் : உக்ரைன் தலைநகர் கீவில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், 170-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 800 நாள்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. சொல்லப்போனால், கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்த தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நேற்றைய தினம் பட்டப்பகலில் உக்ரைன் […]
புதுடெல்லி : உக்ரைனுடனான மோதலின் போது, ரஷ்ய இராணுவத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு இந்தியர்கள் உயிரிழப்பு 4ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த மோதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்ஃபான் என்ற 30 வயது நபர் மார்ச் மாதம் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த ஹெமில் அஷ்வின்பாய் மங்குகியா என்ற 23 வயது […]
Vladimir Putin : ரஷ்யாவின் ஜனாதிபதியான விளாடிமிர் புடின் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி உள்ளார். ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த செர்ஜி ஷோய்குவை ஜனாதிபதி புடின் தற்போது பதவி நீக்கம் செய்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டிற்கு இடையிலான போர் நடைபெற்று கொண்டே வருகிறது. மேலும் இந்த போரில் உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் ரஷ்ய துருப்புகள் தொடர்ந்து முன்னேறி கொண்டே வருகின்றன. இந்நிலையில் ஜனாதிபதி புடின், ரஷ்ய […]
Ukraine : உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எல்லை பகுதிகளில் உக்ரனைக்கு எதிராக ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த தொடர் தாக்குதலால் இருதரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். Read More – சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கிய நம்ம பீக்கி பிளைண்டர்ஸ், அயர்ன் மேன் நாயகர்கள்.! எனவே, இந்த போருக்கு மத்தியில் உக்ரைன் […]
கடந்த பிப்ரவரி 2022ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலானது சுமார் இரண்டு வருடங்கள் நெருங்கியும் இன்னும் ஒரு சில இடங்களில் தாக்குதல் தொடர்பான பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போர் பதற்றம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அக்டோபர் 7 தாக்குதலில் ‘பாலஸ்தீன ஐநா’ அதிகாரிகளுக்கு தொடர்பு.? இஸ்ரேல் கடும் குற்றசாட்டு.! சர்வதேச அளவில் 3ஆம் உலகப்போர் வர வாய்ப்புள்ளது. ரஸ்யா, நோட்டோ […]
உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு பெல்கோரோடில் ரஷ்ய போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் எஸ்-300 ஏவுகணை மூலம் உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து ரஷ்யா தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. விமானத்தில் 65 உக்ரைன் போர்க் கைதிகள், ஆறு பணியாளர்கள் மற்றும் மூன்று இராணுவ வீரர்கள் இருந்தனர். இந்த போர் கைதிகள் உக்ரைனில் நடந்து வரும் போரின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து ரஷ்ய ராணுவத்தால் பிடிக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான […]
உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்தம் கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வந்த தாக்குதல் சற்று குறைந்துள்ள நிலையில், அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் இலியுஷின் Il-76 இராணுவ போக்குவரத்து விமானம் […]
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் டொனட்ஸ்க் நகரம் மீது உக்ரேனியப் ராணுவ படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததாகவும் 10 பேர் காயமடைந்ததாக டொனட்ஸ்க் நகர நிர்வாகத் தலைவர் டெனிஸ் புஷிலின் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சம்பவம் குறித்து உக்ரைனில் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. டொனட்ஸ்க் நகரின் மேயரின் கருத்துப்படி, உக்ரேன் ராணுவம் இங்கிருக்கும் கடைகள் அமைந்துள்ள பரபரப்பான பகுதியில் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளார். தாக்குதலை […]
ரஷ்யப் படைகள் உக்ரேனிய நகரத்தை நோக்கி எல்லாப் பக்கங்களிலிருந்தும் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வந்த தாக்குதல் சற்று குறைந்துள்ள நிலையில், அவ்வப்போது […]
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய நிலையில், இந்த போர் நடவடிக்கை 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது. இந்த போர் தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை சற்று குறைந்துள்ள நிலையில் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல்நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்யா நேற்று ஒரே இரவில் கிய்வ் மீது […]
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையானது தலைநகர் டெல்லியில் கடத்த நவம்பர் 10ஆம் தேதி துவங்கியது. 2+2 பேச்சுவார்த்தை என்பது இரு நாடுகளை சேர்ந்த இரு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டமாகும். இதில், இந்தியா சார்பில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்ந்தா சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். அமெரிக்கா சார்பில் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் […]
உக்ரேனின் கருங்கடல் துறைமுகமான ஒடேசா நகரம் மீது ரஷ்யா ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் சுமார், 20 அடுக்கு மாடி கட்டிடங்கள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 124 ஆண்டுகள் பழமையான ஒடேசா நுண்கலை அருங்காட்சியகமும் சேதமடைந்ததுள்ளது. அது மட்டும்மல்லாமல், ஒரு தானிய கிடங்கு மற்றும் தானியங்களுடன் கூடிய லாரிகள் […]
உக்ரைன் மற்றும் காசாவில் போர் நடைபெற்றுவரும் நிலையில் ரஷ்யா அணுகுண்டு சோதனை நடத்தியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அணுசக்தி சோதனைக்கு எதிராக ரஷ்யா, உலக அளவில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, அணு ஆயுதங்களை தயாரிப்போம் எனவும், ஆனால் அணு ஆயுத சோதனை செய்ய போவதில்லை என்று ஒப்பந்தம் செயப்பட்டு இருந்தன. இந்த நிலையில், அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் (CTBT) ஒப்புதலை ரத்து செய்யும் மசோதாவிற்கு ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். தற்போது, அந்த ஒப்பந்தத்தின் […]
உக்ரைன் தெற்கு மைகோலேவ் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்ததாக மைகோலேவ் கவர்னர் விட்டலி கிம், செய்தியார்களிடம் உறுதி செய்துள்ளார். நேற்று இரவு 8:30 மணிக்கு மைகோலேவ் குடியிருப்பு பகுதியில் உள்ள உணவு நிறுவனத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் மொத்தமும் இடிந்துள்ளது. இதனையடுத்து, மீட்கும் பணிகள் தீவீரமாக நடைபெற்ற நிலையில், இந்த இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த […]
உக்ரைனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 51 பேர் பலியாகியுள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில் கார்கிவ் பகுதியில் உள்ள ஹ்ரோசா கிராமத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஆறு வயது சிறுவனும் ஒருவர். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 19 மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பிறகு கார்கிவ்வில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது […]
உக்ரைனுக்கு கண்ணிவெடிகளை அகற்ற 1000 மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் செயலிழக்கச் செய்யும் 100 கருவிகளையும் பிரிட்டன் வழங்கியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போரானது ஒரு முடிவில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏவுகணை தாக்குதல்கள் மூலம் பாதிப்படைந்த தங்களது சாலைகள் மற்றும் கட்டமைப்புகளை சீரமைக்கும் முயற்சியில் உக்ரைன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவுவதற்காக 1000க்கும் மேற்பட்ட மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் கண்ணி வெடிகளை செயளிக்கச்செய்யும் 100 கருவிகளையும் பிரிட்டன் வழங்கியுள்ளது.கண்ணிவெடிகளை செயலிழக்கச்செய்யும் முயற்சிகளை பாதுகாப்பாக […]
உக்ரைன் மீது ரஷ்யா, இன்று 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல். ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகின்ற நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இன்று காலை உக்ரைன் மீது ரஷ்யா, 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச், பேஸ்புக்கில் தெரிவித்தார். உக்ரைன் தலைநகர் கீவ், உட்பட பல நகரங்களில் […]
தெற்கு உக்ரைனில் அண்மையில் விடுவிக்கப்பட்ட கெர்சன் நகரின் மீது ரஷ்யப் படைகள் மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து அழுத்தத்தை பிரயோகித்து வருவதாகவும் ரஷ்யா 24 மணி நேரத்தில் கெர்சனில் உள்ள பொதுமக்களின் இருப்பிடங்களை நோக்கி பல ராக்கெட் லாஞ்சர்களில் இருந்து 33 ஏவுகணைகளை ஏவியுள்ளதாக ராணுவம் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.