ரஷ்யா மின் உற்பத்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இதனால் உக்ரேனில் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளதாகவும் பொதுமக்கள் மினசாரத்தை அளவாக கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துமாறு உக்ரேனிய எரிசக்தித் துறை அதிகாரிகள் தெவித்துள்ளனர். மொத்த உள்கட்டமைப்பில் சுமார் 40 சதவீதம் உற்பத்தி திறன் கடுமையாக சேதமடைந்துள்ளன” மின்சாரம் வழங்குவதில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், நாடு முழுவதும் மின்தடைகளை திட்டமிடுவதாகவும் தெரிவித்துள்னர். போர்க்களத்தில் உக்ரைனின் ஆயுதப் படைகளுடன் போட்டியிட […]
உக்ரைனுக்கு அருகிலுள்ள தென்மேற்கு ரஷ்யாவில் இராணுவ விமானம் விபத்தில் சிக்கியது 13 பேர் பலி . ரஷ்ய இராணுவ விமானநிலையத்தில் இருந்து எஸ்யூ-34 சூப்பர்சோனிக் போர்-போம்பர் ஜெட் என்ற பயிற்சி விமானத்தை இயக்கிய போது என்ஜினில் ஏற்பட்ட தீயினால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஏய்ஸ்க் நகரில் குடியிருப்பு கட்டிடம் மீது மோதியது. இந்த விபத்தில் விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாகவும்,68 பேர் காப்பாற்றப்பட்டுள்னர் ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.விமானத்தில் இருந்த இரு […]
உக்ரைனின் முக்கியமான செர்னோபில் எனும் அணு உலையை விட்டு ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய முதல் நாளே ரஷ்யா, வடக்கு உக்ரைனிலுள்ள செர்னோபில் அணு உலையை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனையடுத்து, செர்னோபில் அணு உலை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் கோடிக்கணக்கான உயிர்கள் அச்சுறுத்தலில் உள்ளதாகவும் உக்ரைன் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், செர்னோபில் […]