அறுவை சிகிச்சையில் ஒரு நபரின் வயிற்றிலிருந்து 1 கிலோ ஆணிகள் நீக்கப்பட்டுள்ளது..!

1 kg of nails, nuts and a knife were surgically removed from the stomach of a person from Lithuania.

லிதுவேனியாவை சேர்ந்த நபர் ஒருவர் வயிற்றிலிருந்து 1 கிலோ ஆணிகள், கொட்டைகள் மற்றும் கத்தி ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது.

லிதுவேனியாவை சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவர்களிடம் இது குறித்து கூறிய பொழுது அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டுள்ளது. அப்பொழுது அவரது வயிற்றுப் பகுதியில் இரும்பு பொருட்கள் அதிக அளவில் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து எப்படி வயிற்றுக்குள் இது சென்றது என்று தெரியாமல் மருத்துவர்களே குழம்பிய நிலையில், இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவரது வயிற்றுக்குள் இருந்து ஒரு கிலோ ஆணி உட்பட சில சிறிய கத்திகள் மற்றும் சில விதைகள் அகற்றப்பட்டதகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பதாக மது அருந்துவதை நிறுத்தியதாகவும், அதன் பின்பதாக மது அருந்துவதற்கு பதிலாக, ஆணி போன்ற உலோகப் பொருட்களைக் உட்கொண்டதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவரது வயிற்றிலிருந்து இவை அனைத்தும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.