#Breaking : பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை.

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை.

தமிழகம் முழுவதும்  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கொரோனா ஊரடங்கால், பள்ளி, கல்லூரில் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக, அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.