இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சாவக்காட்டு பகுதியில், அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மினி கிளினிக்கை திறந்துவைத்தார். அதன்பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கிராமங்களை நோக்கி மருத்துவர்கள், செவிலியர்களுடன் 2000 மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 52.47 லட்சம் மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்றும், இந்த ஆண்டு […]
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தனியார் பள்ளிகள் தேர்வு ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. சமீபகாலமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. கல்லூரிகள் மட்டும் இறுதியாண்டு மாணவர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 8 மாத காலங்களாக, பள்ளியில் திறக்கப்படாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் […]
பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனைவரின் கருத்துக்களை அறிந்து, முதலமைச்சர் அவர்கள் தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுப்பார். கடந்த 9 மாதங்களாக கொரோனா என்னும் கொள்ளை நோய் உலகதையே ஆட்டி படைத்தது வருகிற நிலையில், தமிழாக்கம் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து, சமீப காலமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கால்லூரி […]
நெல் கொள்முதல் செய்யும் விவசாயிகளிடம் யாராவது கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் 22 தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கி வைத்து விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது தற்போது மழைக்காலம் என்பதால் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு […]
பள்ளிகள் திறப்பு குறித்து எந்த ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை. கொரோனா ஊரடங்கால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கும் என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும், அது தொடர்பாக எந்த ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை என்றும் […]
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பள்ளி கட்டணம் தொடர்பாக பெற்றோர்களை கட்டாயப்படுத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெற்றோர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் பள்ளிகள் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நீட் தேர்வு பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு குறித்து முதல்வர் பழனிசாமி நடவடிக்கை […]
பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கொரோனா ஊரடங்கால், பள்ளி, கல்லூரில் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக, அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் […]
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, ஆகஸ்ட் 10-ம் தேதி முதல்வர் அறிவிப்பார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் […]
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து ஆக – 3ல் முதல்வருடன் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை. கொரோனா தொற்றுப் பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும். 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்கப்படும். பள்ளிக்கு வராமல் இருக்கும் 2 கோடி குழந்தைகள் 2020-ம் ஆண்டுக்குள் பள்ளியில் சேர்க்க புதிய […]
ஆன்லைன் வகுப்புகள் புதிய வரலாற்றைப் படைக்கும் விதமாக அமையும். கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், இவர் வரும் 14-ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இவர் ஆன்லைன் வகுப்பு குறித்து கூறுகையில், இதுவரையிலும் இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு இ-பாக்ஸ் எனும் நிறுவனத்தின் […]
இம்மாத இறுதிக்குள் பள்ளிகளுக்கு பாடபுத்தக்கங்கள் அனுப்பப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பரவலால், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறுகையில், இம்மாத இறுதிக்குள் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 1-12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படும் என்றும், நாட்கள் குறைவாக உள்ளதால் முக்கிய பாடங்களை மட்டும் படிக்க […]
தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 31,667 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 269 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், ‘தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை வசூலித்தல், […]
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும். கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. மேலும், நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும். மேலும், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பெற்றோர்களிடம் கருது […]
கொரோனா வைராசை கட்டுப்படுத்தாத அரசு அவசரகதியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது ஏன்? தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை தமிழகத்தில், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 78 பேர் இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸின் தீவிர பரவலால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் சேயால்படாத காரத்தால், நடைபெறவிருந்த பொது தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் […]
11-ம் வகுப்புக்கு எஞ்சியுள்ள ஒரு தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 49,400 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,600-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் மே -17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகள், […]