மறுஉத்தரவு வரும் வரை இவைகளுக்கே தடை தொடரும்.. அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பொது முடக்கத்தின் 4-ஆம் கட்ட தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பொது முடக்கத்தின் 4-ஆம் கட்ட தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

அதன்படி, இனி தமிழகத்தில் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இ-பாஸ்  ரத்து , சென்னையில் மெட்ரோ ரயில்கள் செப்டம்பர் 7 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மறுஉத்தரவு வரும் வரை சிலவற்றிற்கு தமிழக அரசு தடை தொடரும் என அறிவித்துள்ளது. அதன்படி,

பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்விநிறுவனங்கள் இயங்க தடை .எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதோடு, அதை ஊக்குவிக்கலாம்.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் (Entertainment Amusement Parks), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து (Suburban trains)

மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள் கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.