எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ள தகவல் முற்றிலும் உண்மையில்லை என மகன் சரண் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது என்றும் எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்போது எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.பி.சரண் இதனை முற்றிலும் உண்மையில்லை என்று மறுத்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.பி.சரண், தந்தையின் உடல்நிலை குறித்து எனக்கே முதலில் தகவல் கிடைக்கும். பிறகு தான் மீடியாவுக்கு தரப்படும். அவருக்கு COVID Positive/Negative என்பதை எல்லாம் தாண்டி, இன்னமும் தொடர்ந்து வெண்டிலேட்டர், எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை சீராக உள்ளது என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மகன் சரண் தெரிவித்துள்ளார். மேலும், அப்பாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தபின் தகவலை இன்று வெளியிடுகிறேன் என்று கூறிள்ளார்.
unknown node