ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டி இந்திரா காலனியில் இருந்த ஒரு வீட்டில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டது.உடனடியாக அருகில் இருந்த பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.
இதை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் வெடி சத்தம் கேட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.அந்த சோதனையில் தங்கேஸ்வரன் என்ற வாலிபர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தெரிய வந்தது.
unknown nodeதங்கேஸ்வரன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது எதிர்பாராத விதமாக ஒரு நாட்டு வெடி குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தில் தங்கேஸ்வரன் அதிர்ஷ்டவசமாக காயம் இல்லாமல் தப்பித்து விட்டார்.
இதை தொடர்ந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ரப்பர் மற்றும் மருந்துகள் அனைத்தையும் போலீசார் கைப்பற்றி தங்கேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.