234 தொகுதிகளிலும் உங்கள் விஜய்தான் வேட்பாளர் – த.வெ.க தலைவர் விஜய் பேச்சு!

தமிழ்நாடு முழுவதும் நான் தான் வேட்பாளர் என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

vijay speech

மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட த.வெ.க தலைவர் விஜய் திமுக, பாஜகவை விமர்சனம் செய்தும் விஜயகாந்த் மற்றும் எம்ஜிஆர் குறித்தும் பல விஷயங்களை பேசினார்.

குறிப்பாக, “மதுரை மண்ணில் கால் வைத்த தருணத்தில் இருந்து, புரட்சித் தலைவர் எம்ஜிஆரை நினைத்துக்கொண்டே இருந்தேன். அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், என் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்துடன் நெருக்கமாக பழகும் பாக்கியம் கிடைத்தது,” என்று உணர்ச்சி ததும்ப பேசினார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் ” இந்த நேரத்தில் நான் மக்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்புகிறேன். அது என்னவென்றால், மதுரை கிழக்கு வேட்பாளர் விஜய் மதுரை மேற்கு வேட்பாளர் விஜய் மதுரை மத்திய வேட்பாளர் விஜய் மதுரை வடக்கு வேட்பாளர் விஜய் மேலூர் வேட்பாளர் விஜய் திருப்பரங்குன்றம் வேட்பாளர் விஜய் 234 தொகுதியிலும் வேட்பாளர் விஜய். உங்கள் விஜய் தான் இந்த கட்சியின் சின்னம் தமிழ்நாடு முழுக்க நானே வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” என்னடா எல்லா தொகுதிகளும் ஒரே ஆள் வேட்பாளர் என்று பார்க்கிறீர்களா? 234 தொகுதிகளிலும் உங்களுடைய விஜய் தான் உங்களுடைய சின்னம் விஜய் மட்டும் தான். இன்னும் சிம்பிளாக சொல்லவேண்டும் என்றால் உங்களுடைய வீட்டில் இருக்கும் ஒருவர் தான் வேட்பாளராக நிற்கபோகிறார். அந்த வேட்பாளரும் நானும் வேறு வேறு இல்லை. நீங்க அவருக்கு ஒட்டு போட்டீர்கள் என்றால் எனக்கு போட்ட மாதிரி தான். நீங்கள் அப்படி தான் நினைப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், நம்மளுடைய எதிரிகளுக்கு நன்றாகவே தெரியும். எனவே, அதிகாரத்தை தூக்கிவிட்டு வந்துவிடுவார்கள் வரட்டும் பார்த்து கொள்ளலாம்” எனவும் த.வெ.க தலைவர் விஜய் பேசியுள்ளார்.