ஆளுநர் சந்திப்பு ஏன்?- அதிமுக சட்ட ஆலோசனைக்குழு விளக்கம்!

AIADMK Legal Advisory Committee members met Tamil Nadu Governor RN Ravi today.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் இன்று சந்தித்தனர்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவின் சட்ட வல்லுநர் குழு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் என்று கூறினார்.

திமுக அரசுக்கு எதிராக பேசுவோர் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. ராஜேந்திர பாலாஜி என்ன கொலையா செய்தார்? என்றும் அவரை கைது செய்ய ஏன் இவ்வளவு அவசரம் காண்பிக்கிறது தமிழ்நாடு அரசு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரும் 5ம் தேதியன்று தமிழக சட்டப் பேரவை கூடுகின்ற நிலையில், அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தளவாய்சுந்தரம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை, பாபு முருகவேல் ஆகியோர் இன்று ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.