புத்தாண்டே வருக.. புதுவாழ்வு தருக – முதலமைச்சர் வாழ்த்து

Default Image

அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது என முதலமைச்சர் முக ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து.

ஆங்கில புத்தாண்டையொட்டி, புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் வீடியோ வாயிலாக அனைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம்.

புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக! இணையற்ற இளைய ஆற்றல் வெல்க! என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் கூறுகையில், வெறுப்பு உணர்வை தூண்டும் மதவாத சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடமளிக்க கூடாது எனவும் முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்