இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி இன்று இரவு 8 மணிக்கு மேல் சென்னையில் மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது சென்னை காவல்துறை. சென்னை கடற்கரை சாலைகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை 6 […]
நியூசிலாந்து நாட்டில் 2023 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தில் 2023 ஆம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு பிறந்ததை, மக்கள் வெடிவெடித்து வாணவேடிக்கையுடன் கொண்டாடி வருகின்றனர். கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் புதிய ஆண்டை உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர்.
அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது என முதலமைச்சர் முக ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து. ஆங்கில புத்தாண்டையொட்டி, புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் வீடியோ வாயிலாக அனைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம். புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக! இணையற்ற இளைய ஆற்றல் […]
புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் இன்று நள்ளிரவு 2 மணி வரை வழிபாட்டு தலங்கள் செயல்பட அனுமதி. புதுச்சேரியில் இன்று நள்ளிரவு 2 மணி வரை வழிபாட்டு தலங்கள் செயல்பட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே நள்ளிரவு 1 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து “பத்து தல” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெடுஞ்சாலை படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்தில் கெளதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் இதற்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற “முஃப்தி” படத்தின் தமிழ் ரீமேக். இதையும் படியுங்களேன்- என்னோட […]
இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வெற்றியை வழங்கட்டும் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வாழ்த்து. புலரும் புத்தாண்டு அனைவருக்கும் ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இருளும், சோகமும் விலகி இருக்க புதிய ஆண்டு பிரகாசம், நம்பிக்கை நிறைந்ததாக இருக்கட்டும். நிறைந்த வளம், ஆரோக்கியம், மிகுந்த சந்தோசம், வெற்றியை இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வழங்கட்டும் எனவும் கூறியுள்ளார்.
நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என கட்டுப்பாடுகள் விதிப்பு. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 80% பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளம் அருகே எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த கூடாது எனவும் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது. ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். காவல்துறை […]
புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு தமிழக காவல்துறை அறிவுறுத்தல். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், புத்தாண்டு அன்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். வரும் 31-ஆம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முதல்நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரையில் மக்கள் கடல்நீரில் இறங்கி கொண்டாடக்கூடாது. வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடி […]