சென்னை : தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 08 & 09: நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் (மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் லேசான முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 10: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் (50-60 கி.மீ வேகம்) கூடிய மிதமான மழையும், பிற இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 11 & 12: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசான மழையும் தொடரும்.
சென்னை மற்றும் புறநகர் நிலவரம் (இன்று மற்றும் நாளை): நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக 38°C - 39°C வரையிலும், குறைந்தபட்சமாக 29°C - 30°C வரையிலும் பதிவாகக்கூடும்.
